தல அஜித்திற்கு மிரட்டல் விட்ட இயக்குனர் பாலா..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

பாலா

தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான நடிப்பின் மூலமாக பல்வேறு ரசிகர் கூட்டத்தை திரட்டியவர் தான் தல அஜித். இவர் தன் வாழ்வில் ஏகப்பட்ட பிரச்சினைகளை தாண்டி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தல அஜித் எளிமையாக இருப்பது மட்டுமல்லாமல் அன்பான குணம் கொண்டவர் இதன் காரணமாகவே இவரை பிடிக்காதவர் தமிழ் சினிமாவில் யாரும் கிடையாது. இந்நிலையில் இயக்குனர் பாலா அவர்கள் அஜித்திற்கு மிரட்டல் விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அந்த வகையில் இயக்குனர் பாலா அவர்கள் நடிகர் ஆர்யாவை வைத்து நான் கடவுள் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் ஆனால் இத்திரைப்படத்தில் முதன்முதலாக தல அஜீத் தான் நடிக்க இருந்தார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தல அஜித் ஏன் இந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை என்ற காரணம் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது. அந்த வகையில் தல அஜித் இந்த திரைப்படத்தில் நடிக்க நீண்ட நாள் கால்ஷீட் கேட்டதாகவும் அஜித்தின் முடியை நீளமாக வளர்க்க சொன்னதாகவும் பாலா கண்டிஷன் போட்டுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் ஒரு ஆன்மீகவாதி என்ற காரணத்தினால் அஜித்திற்கு இந்த திரைப்படம் பிடிக்கவில்லையாம். அதுமட்டுமில்லாமல் பாலாவும் திரைப்படத்தின் கதையை முழுமையாக அஜித்திடம் கூறவில்லை. ஏனெனில் பாலா தன்னுடைய கதையில்  அடிக்கடி மாற்றம் செய்வது வழக்கம்தான் இதனால் அஜித் நடிக்க மாட்டேன் என அட்வான்ஸ் வாங்கிய பிறகு மறுத்துவிட்டாராம்.

இவ்வாறு அட்வான்ஸ் வாங்கிய பிறகு நடிக்க மாட்டேன் என்று தல அஜித் கூறியதன் காரணமாக பாலா அஜித்துக்கு மிரட்டல் விட்டதாக பயில்வான் ரங்கநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார். இவ்வாறு வெளிவந்த செய்தி சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

ajith
ajith