இயக்குனர் பாலா – சூர்யா : இணையும் புதிய படத்தின் சூட்டிங் – எப்போ, எந்த தேதியில் தெரியுமா.?

surya and bala
surya and bala

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்திலிருந்து இப்போது வரையிலும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். ஏன் அண்மையில் கூட இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக எதற்கும் துணிந்தவன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை சிறப்பாக பாண்டிராஜ் இயக்கி உள்ளார். இந்த திரைப்படம் நாளை கோலாகலமாக உலக அளவில் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து பல்வேறு அப்டேட்கள் உள்ளே வந்து ரசிகர்களை பிரபலமடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்களுடன் கதை கேட்டுள்ளார் சூர்யா.

அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அந்த படத்திற்கு முன்பாகவே வேறு ஒரு திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார் அந்த திரைப்படத்தை இயக்குனர் பாலா இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

பாலாவும் சூர்யாவும் இணைந்து பல்வேறு சிறப்பான படங்களை கொடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ஆரம்பத்தில் காதல் மன்னனாக வலம் வந்த சூர்யாவுக்கு ஆக்சன் படத்தை முதலில் கொடுத்தது இயக்குனர் பாலா தானாம். நந்தா படத்தின் மூலமாகத்தான் மிகப்பெரிய ஆக்சன் நடிகராக சூர்யா காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பாலாவும் சூர்யாவும் பிதாமகன் திரைப்படத்தில் இணைந்தனர் அதனை தொடர்ந்து அவன் இவன் படத்தில் ஒரு சின்ன கெஸ்ட் ரோலில் வந்து போவார். சூர்யா ஆர்யாவுடன் மிக நெருக்கமானவர் பாலா தற்போது இவர்கள் இருவரும் இணைந்து ஒரு புதிய படத்தில் இணைய உள்ளது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.

சூர்யா பாலா இணையும் புதிய படத்தில் ஜோதிகா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் மார்ச் 18ஆம் தேதி மதுரையில் துவங்கப்பட உள்ள நிலையில் இந்தப்படம் மதுரையை சுற்றி தான் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.