சினிமா உலகில் நடிக்கும் பெரும்பாலான நடிகர் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதில் முக்கியம் என்னவென்றால் நீங்கள் சினிமா உலகில் எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும் அவ்வப்போது தனது குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் அது பிரச்சனையாக ஏற்பட்டு ஒரு கட்டத்தில் விவாகரத்தில் முடியும்.
அந்த வகையில் சமீபகாலமாக நடிகர், நடிகைகள் பலர் விவாகரத்து பெற்று பிரிந்து உள்ளனர். சமந்தா, அமலாபால், தனுஷ், இமான் மற்றும் பலர் விவாகரத்து பெற்றுள்ளனர் அந்த லிஸ்டில் தற்பொழுது இணைந்து உள்ளவர் தான் இயக்குனர் பாலா. பாலா தமிழ் சினிமாவின் பல்வேறு திரைப்படங்களை இயக்கியும், தயாரித்தும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்.
இப்படி இருந்த இவர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டாராம். ஆம் முத்து மலர் என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் பிராதானா என்ற ஒரு மகள் உள்ளனர். 18 வருடங்கள் இருவரும் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று சுமூகமாக பிரிந்தனர்.
இச்செய்தி திரை உலகை ஆச்சரியப்படுத்தியது இந்த நிலையில் நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பாலா முத்துமலர் விவகாரம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் சொன்னது ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவுக்கு திருமணத்தில் ஈடுபாடு கிடையாது ஆனால் அவரது பெற்றோர்கள் வற்புறுத்தியதால் பணக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டவர் அவர் தான் முத்து மலர்.
இவர்கள் இருவருக்கும் அடிக்கடி பிரச்சினைகள் வந்து சண்டையில் முடியும் ஒரு கட்டத்தில் இயக்குனர் பாலா வீட்டுக்கு வராமலேயே ஆபிஸிலேயே தங்கிவிடுவார். இதனால் முத்து மலரே ரொம்ப வருத்தப்பட்டார் ஒரு கட்டத்தில் முத்துமலர் கல்யாணம் செய்து கொள்வதற்கு முன்பாகவே அரசியல்வாதியின் மகன் ஒருவரை காதலித்து வந்தார்.
பாலா வீட்டுக்கும் சரியாக வராததால் அவர் தனது முன்னாள் காதலருடன் அடிக்கடி வெளிநாடு சென்று வந்தார் அந்த பஞ்சாயத்தும் பல என கூறியிருந்தார் பயில்வான் ரங்கநாதன். மேலும் பேசிய அவர் இருவருக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்ததன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்ததாக கூறினார் பயில்வான் ரங்கநாதன். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.