இயக்குனர் பாலா தனது படங்கள் விருதுகள் வாங்க வேண்டும் என்பதற்காகவே படத்தை எடுக்க கூடிய இயக்குனர். இவர் இதுவரை இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி படங்களாக இருந்து வந்துள்ளன இப்பொழுது கூட இவர் சூர்யாவை வைத்து வணங்கான் திரைப்படத்தை எடுத்து வருகிறார்.
இது இப்படி இருக்க 2003 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் சூர்யா விக்ரம் நடிப்பில் வெளியாகி பட்டைய கிளப்பிய திரைப்படம் பிதாமகன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது பல விருதுகளையும் தட்டி தூக்கியது. ஆனால் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வி ஏ துரைக்கு எதிர்பார்த்த லாபத்தை கொடுக்கவில்லையாம்..
இதை அறிந்து கொண்ட பாலா உங்களுக்கு இன்னொரு படத்தை பண்ணி தருகிறேன் என கூறியுள்ளார். அதை நம்பி தயாரிப்பாளர் வி ஏ துரை பாலாவுக்கு 10 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஆனால் இயக்குனர் பாலா பணத்தை வாங்கிக் கொண்ட பிறகு படத்தை இயக்கி தருவதற்கான எந்த வேலையையும் செய்யவில்லை பல வருடங்கள் ஆன நிலையில் தயாரிப்பாளர்..
நான் கொடுத்த முன் பணத்தை திரும்ப கொடுங்கள் என தொடர்ந்து கேட்டுள்ளார் ஒரு கட்டத்தில் பாலாவின் அலுவலகத்திற்கு சென்று உள்ளார் தயாரிப்பாளர் வி ஏ துரை. ஆனால் அங்கு இருந்த உதவியாளர் வெளியே அனுப்பி உள்ளனர்.
இதனால் தயாரிப்பாளர் ரோட்டிலேயே உட்கார்ந்து கொண்டார் ஒரு கட்டத்தில் போலீஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் வந்து சமாதானப்படுத்தி அனுப்பி உள்ளனர். இந்த செய்தி பெரிய அளவில் வைரலானது இதை பார்த்த பலரும் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளருக்கு இப்படியா தண்ணி காட்டுவது எனக்கூறி திரை உலகினர் ஒரு பக்கம் பேசி வருகின்றனர்.