படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை ஓட சொன்னா இயக்குனர் பாலா – கடைசியில் நடந்த விபரீத முடிவு.

surya-and-bala
surya-and-bala

நடிகர் சூர்யா வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்கக்கூடிய ஒரு நடிகர். அண்மை காலமாக சமூக அக்கறை உள்ள படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அந்த வகையில் ஜெய்பீம், சூரரைப்போற்று, எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பையும் பெற்றன.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா சிறந்த இயக்குனர்கள் என்ற அந்தஸ்தை பெற்று இருக்கும் இயக்குனர் பாலா மற்றும் வெற்றிமாறனுடன் அடுத்தடுத்த படங்களில் கைகோர்த்து பணியாற்ற உள்ளார் முதலாவதாக இயக்குனர் பாலா உடன் இணைந்து படத்தின் ஷூட்டிங்கில் பணியாற்றிவருகிறார் இந்த படம் முழுக்க முழுக்க மீனவர்கள் பற்றிய படமாக இருக்கும் என தெரியவருகிறது.

இந்த படம் கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இதற்கிடையில் பாலாவுக்கும், சூர்யாவுக்கும் இடையே சில பிரச்சனைகள் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் அது வெறும் வதந்தி என தற்போது தெரியவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு புதிய தகவலும் கிடைத்துள்ளது அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் பாலா சூர்யாவை காலையிலிருந்து மதியம் வரை வெயிலில் ஓட சொல்லியுள்ளார் சூர்யாவும் தொடர்ந்து அப்படி ஓடியிருக்கிறார் ஒருகட்டத்தில் எனக்கு வயிற்று வலி என கூறிவிட்டு படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஓடி உள்ளார்.

இதை அறிந்து கொண்ட இயக்குனர் பாலா நிச்சயம் சூர்யா படப்பிடிப்பு தளத்திற்கு வர மாட்டார் என்பதை நன்கு உணர்ந்து விட்டாராம். பின் படப்பிடிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.இதனை பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் கூறியுள்ளார்.