தனது காதல் மனைவியுடன் கமலஹாசனை சந்தித்த அட்லி.! எதற்காக தெரியுமா? வைராலாகும் புகைப்படம்…

atlee

director atlee with his wife meet kamal photo viral:தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்தார் அட்லி, இவர் முதன்முதலில் சங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றியவர்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார்,  அதுமட்டுமில்லாமல் பிறகு விஜய் நடிப்பில் வெளியாகிய தெரி, மெர்சல், பிகில் என மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

என்னதான் இவர் திரைப்படம் வெற்றி திரைப்படமாக அமைந்தாலும் விமர்சனங்களுக்கு பஞ்சமே இருக்காது.  இவர் இயக்கும் திரைப்படத்தை அந்த திரைப் படத்தின் காப்பி இந்த திரைப்படத்தின் காப்பி என விமர்சனம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில் அட்லி அடுத்ததாக வாலு திரைப்படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது,  அட்லி பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரியா அட்லி தற்போது படத்தை தயாரித்து வருகிறார்.  பிரியா அட்லி அந்தகாரம் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.  இந்த திரைப்படம் OTT இணையதளத்தில் வெளியானது.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது, அப்படி இருக்கும் வரையில் அட்லி மற்றும் பிரியா அட்லி அந்தகாரம் படக்குழுவினர் அனைவரும் உலக நாயகன் கமலஹாசனை சந்தித்து ஆசிர்வாதம் வாங்கி உள்ளார்கள்.

அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் அட்லி அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

kamal-atlee-priya1
kamal-atlee-priya1
kamal-atlee-priya