Atlee Kumar: இயக்குனர் அட்லீ சமீபத்தில் தனக்கு இந்த இருவர் மட்டும் கால்ஷீட் கொடுத்தால் ரூபாய் 3000 கோடி வசூல் செய்யும் படத்தை தன்னால் உருவாக்க முடியும் என தெரிவித்திருப்பது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜாராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்
முதல் படமே பிளாக் பஸ்டர் ஹிட் அடித்ததால் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். தமிழில் நான்கு படங்கள் மட்டுமே இயக்கிய அட்லீ இதனை அடுத்து பாலிவுட்டிற்கு அறிமுகமானார். அப்படி ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தினை இயக்கிய நிலையில் இப்படம் சமீபத்தில் வெளியாகி 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படங்களை தொடர்ந்து அட்லீயின் அடுத்த படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த சூழலில் இயக்குனர் அட்லீ சமீப பேட்டியில் ஷாருக்கான் மற்றும் விஜய் ஆகிய இருவரையும் வைத்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருப்பதாக தெரிவித்தார். மேலும் தனக்கு இந்த இருவரும் காட்சீட் கொடுத்தால் கண்டிப்பாக என்னால் 3000 கோடி வரை வசூல் செய்யும் படத்தை மிக எளிமையாக எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.
இவ்வாறு அட்லீயின் ஆசையை விஜய் மற்றும் ஷாருக்கான் நிறைவேற்றுவார்களா? என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இவ்வாறு சினிமாவில் இந்த நிலமைக்கு நான் வருவதற்கு காரணம் விஜய் தான் என்றும் அவர் தான் தன்னை நம்பி அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.