Jawan Movie: பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். முதல் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றதால் இதனை அடுத்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் எனத் தொடர்ந்து அடுத்தடுத்து வெற்றி திரைப்படங்களை தந்து வந்தார்.
இந்த படங்களை தொடர்ந்து தனது ஐந்தாவது படத்திலேயே பாலிவுட்டில் தனது கால் தடத்தை பதித்தார். அப்படி சமீபத்தில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி அன்று ஜவான் திரைப்படம் பான் இந்தியா படமாக வெளியானதை தொடர்ந்து இப்படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோன், விஜய் சேதுபதி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தனர்.
கலவை விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்டியது. இவ்வாறு ஜெயிலர் படத்தின் வெற்றியினை தொடர்ந்து இந்தியாவில் பணக்கார இயக்குனர்களின் பட்டியலில் அட்லீ இணைந்துள்ளார். சமீப காலங்களாக தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ரூ.1000 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.
ஆனால் தமிழ் நடிகர்களின் திரைப்படங்கள் ரூ.1000 கோடியை இதுவரையிலும் நெருங்கவில்லை. இந்த சூழலில் அட்லீயின் ஜவான் திரைப்படமாவது 1000 கோடி மேல் வசூல் செய்யுமா என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்து வந்தனர். அப்படி தற்பொழுது ஜவான் திரைப்படத்தின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூபாய் 1004 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது இதனை அட்லீத் தனது சமூக வலைதளத்தில் வீடியோவாக பகிர்ந்து உள்ளார். ஜவான் படத்தினை ஷாருக்கானின் மனைவி தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல கோடி பட்ஜெட்டில் உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜவான் படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.
வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..