தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் அட்லி சங்கருக்கு துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் பிறகு அட்லி சங்கரிடம் இருந்து அனைத்தையும் கற்றுக்கொண்ட இவர் ஆர்யா மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவருடைய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் ராஜா ராணி திரைப்படத்தினை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று திரைப்படங்களையும் தொடர்ந்து விஜய் வைத்து இயக்கி வந்தார் இந்த மூன்று திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
இவ்வாறு தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தற்பொழுது ஹிந்தியில் பிரபல நடிகரான ஷாருக்கானாய் வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இந்த திரைப்படத்தில் ஷாருக்கான் தொடர்ந்து தீபிகா படுகோன், நயன்தாரா போன்ற முன்னணி நடிகைகளும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் சமீப பேட்டியில் பிரபல இயக்குனர் ஒருவர் அட்லியைப் பற்றிய பேசிய விஷயம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அனுராக் கஷ்யப். இவர் நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி ஆகியவர்கள் நடித்திருந்த இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தார்.
இவர் சமீப பேட்டி ஒன்றில் தென்னிந்திய திரைப்படங்களோடு ஒப்பிட்டு பார்க்கும்பொழுது தொடர்ந்து பாலிவுட் திரைப்படங்கள் தோல்வியடைந்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என கேள்வி எழும்பியுள்ளது. இதற்கு அனுராக் கஷயத் கூறியதாவது இங்கு ஹிந்தி தெரியாதவர்கள் எல்லாம் படம் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் தென்னிந்திய சினிமாவில் அப்படி கிடையாது அவர்களுடைய கலாச்சாரத்தை ஒட்டியே படங்கள் இயக்கப்படுகிறது. மேலும் வேறு மொழி பேசுபவர்கள் ஹிந்தியில் மொழி எடுப்பதால் ஹிந்தியின் கலாச்சாரத்தோடு அந்த படங்கள் ஒட்டி இருப்பதில்லை. இவ்வாறு இந்த நிலை மாற வேண்டும் இது மாறினால் மட்டுமே ஹிந்தி மக்கள் மத்தியில் பிரபலமடையும் என கூறியுள்ளார். தற்பொழுது அட்லி ஷாருக்கானை வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கி வரும் நிலையில் இதனை மறைமுகமாக அனுராக் கஷயத் கூறுகிறார் என நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.