Director Atlee Kumar: பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த அட்லீ ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். அட்லீயின் முதல் திரைப்படமே மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல ரீச் கிடைத்ததனால் குறுகிய காலத்திலேயே பிரபலமானார்.
அப்படி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்களை கொடுத்த அட்லீ இந்திய இயக்குனர்களில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார். தமிழில் இந்த படங்களுக்கு பிறகு தற்போது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
அப்படி ஹிந்தி பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தினை இயக்கியுள்ளார் இந்த படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைப்போட்டு வருகிறது. ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, விஜய் சேதுபதி வில்லனாக நடித்து கலக்கி உள்ளார்.
இவ்வாறு தொடர்ந்து இயக்குனர் அட்லீ சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வரும் நிலையில் ஷாருக்கானை தொடர்ந்து வேறு எந்த முன்னணி நடிகரின் படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
அந்த வகையில் அட்லீ ஜவான் படத்திற்கு பிறகு மீண்டும் தமிழ் திரைப்படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் தற்பொழுது வெளியாகி இருக்கும் தகவலின் படி முன்னணி நடிகர்களான அல்லு அர்ஜுன் மற்றும் மகேஷ் பாபு இவர்களில் ஒருவரின் படத்தினை அட்லீ இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் தற்பொழுது வரையிலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகவில்லை. அல்லு அர்ஜுன் தற்பொழுது புஷ்பா 2 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.