Director Alphonse Puthiran: மலையாள முன்னணி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் சினிமாவில் இருந்து விலகுவதாகவும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏராளமான குறும்படங்கள், ஆல்பம் சாங்ஸ் மூலம் பிரபலமான அல்போன்ஸ் புத்திரன் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவர் தற்பொழுது இளையராஜா இசையில் கிட்ஸ் என்ற படத்தினை இயக்கி வரும் நிலையில் சினிமாவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள் போன்றவற்றின் மூலம் பிரபலமான அல்போன்ஸ் புத்திரன் நேரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார்.
இப்படத்தில் நிவின் பாலி, நஸ்ரியா, பாபி சிம்ஹா, நாசர், சார்லி உள்ளிட்ட ஏராளமான திரை பட்டாளங்கள் நடித்திருந்தனர். தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் கவனம் ஈர்த்த அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் திரைப்படம் புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது. இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
மேலும் சென்னையிலேயே 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டு ஹிட்டு அடித்தது. எனவே பிரேமம் படத்தின் வெற்றிக்கு பிறகு அல்போன்ஸ் இயக்கம் படங்களில் டாப் ஹீரோக்கள் நடிக்க மிகவும் ஆர்வமுடன் இருந்தனர். அப்படி அல்போன்ஸ் அஜித்தை வைத்து படம் இயக்குவதில் ஆர்வமுடன் இருந்தார்.
கருப்பு நிற டிரான்ஸ்பரெண்ட் புடவையில் ஹாட் போஸ்.. மில்கி பியூட்டி தமன்னாவின் புகைப்படங்கள்
பிறகு பிருத்விராஜ், நயன்தாரா நடித்த கோல்டு படத்தினை இயக்கியிருந்தார். ஆனால் படம் கலவை விமர்சனத்தை பெற்றது. இந்நிலையில் தற்போது சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்த அல்போன்ஸ் புத்திரன் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது ‘நான் எனது சினிமா கெரியரை நிறுத்தி விட்டேன் எனக்கு ஆட்டிசம் குறைபாடு இருந்தது தற்போது தான் தெரியவந்தது.
இதனால் நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை. குறும்படங்கள், ஆல்பம் இயக்குவதில் ஆர்வம் காட்டுவேன் திரைப்படம் இயக்க முடியவில்லை என்றாலும் ஓடிடி படைப்புகளில் கவனம் செலுத்துவேன் எனக்கு சினிமாவில் இருந்த விலக விருப்பம் கிடையாது ஆனால் வேறு வழி இல்லை’ என உருக்கமாக கூறியுள்ளார்.