தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அகத்தியன். இவர் அஜித் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற காதல்கோட்டை திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார் இத்திரைப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது.
இயக்குனர் அகத்தியனுக்கு மூன்று மகள்கள் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.அந்த வகையில் முதல் மகள் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்து வருகிறார். கனி இயக்குனர் திரு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இரண்டாவது மகள் விஜயலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் வெள்ளித்திரையிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்குனர் பெரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இதனை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் அகத்தியனின் மூன்றாவது மகள் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவர்களின் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தவகையில் அகத்தியனின் 3 மகள்கள் மற்றும் மருமகள்கள் இருக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்துக்கள் மற்றும் கமெண்ட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.