கமல் படத்தை பார்க்க சுமார் 1.75 லட்சம் செலவு செய்த இயக்குனர் அமீர்.! எந்த படம் தெரியுமா.?

kamal-and-ameer
kamal-and-ameer

தமிழ்சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் தன்னை மாற்றிக்கொண்டு சிறப்பாக ஓடிக் கொண்டு இருப்பவர் நடிகர் ஆமீர். முதலில் இவர் பாலாவின் அசிஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றிய பின் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களை இயக்கியவர் இதுவரை மௌனம் பேசியதே, ராம், பருதிவீரன், பேரன்பு ஆகிய சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர்.

அதன்பின் பெருமளவு படங்களை இயக்கவில்லை என்றாலும் அதிக படங்களில் நடித்து வருகிறார். இப்போது கூட பல்வேறு படங்களில் இருக்கின்றன இந்த நிலையில்  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது தமிழா தமிழா இதில் சமூக அக்கறை, அரசியல், ஆரோக்கியம், நாகரீகம் என அனைத்தும் சம்பந்தப்பட்ட விவாதங்கள் நடைபெறும்.

அண்மையில் தமிழா தமிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இயக்குனர் அமீர். இந்த நிகழ்ச்சியை நடிகரும், பத்திரிகையாளருமான கரு. பழனியப்பன் அவர்கள் தொகுத்து வழங்கி வருகிறார். அப்பொழுது நடந்த சில சுவாரஸ்ய தகவல்கள் இணைய தள பக்கத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

கரு. பழனியப்பன் அமீர் குறித்து பேசியது : இயக்குனர் அமீர் ராம் திரைப்படத்தை கொடைக்கானலில் படமாக எடுத்துக் கொண்டிருந்தார். இத்திரைப் படத்தை இயக்கியும், தயாரித்தும்  கொண்டு இருந்தார். இயக்குனர் அமீர் இந்த படத்தை எடுப்பதற்கான காசை தனது நண்பர்களிடமும், தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்துதான் எடுத்து வந்தார் படத்தின் ஷூட்டிங்கிற்காக காசு வாங்க மதுரை சென்று வருவார்.

அப்படி ஒரு தடவை நடிகர் ஆமீர் மேனேஜரிடம் சொல்லிட்டு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இடத்திற்கு செல்லுங்கள் நான் மதியம் வந்து விடுகிறேன் என கூறி விட்டு மதுரைக்கு சென்று உள்ளார். மேனேஜரும் வேறு எதுவும் சொல்லாமல் நடிகர், நடிகைகளை அழைத்து கொண்டு சென்றார் மதியமாகியதால் அவர்களை சாப்பிட வைத்தார் பின் 4 மணிக்கு மேல் கோடை கானல் இருட்டு ஆகிவிடும்  என்பதால் உடனே  மேனேஜர் அமீருக்கு ஃபோன் செய்து அவருடன் பேசியுள்ளார்  நீங்கள் ரூமுக்கு செல்லுங்கள் நான் வந்துவிடுகிறேன் என கூறி உள்ளார்.

மேனேஜர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர் பணத்தை வாங்கத்தான் மதுரைக்கு சென்று இருப்பதாக பின் நேரில் வந்து அவர் சொன்ன வார்த்தைகள் நான் கமலின் விருமாண்டி திரைப்படத்தின் முதல் நாள்  ஓபனிங் ஷோ பார்க்க மதுரைக்கு சென்றதாக கூறினார் அந்த இடத்திலேயே மேனேஜர் ஷாக்கா lகி விட்டாராம்.

ஒரு நாள் சூட்டிங் நிறுத்தப்பட்டால் சுமார் 1.75  லட்சம் செலவாகி விடும் அப்படிப்பார்த்தால் நடிகர் ஆமீர் ஒரு நாள் சூட்டிங் நிறுத்திவிட்டு தான் அந்த படத்தை பார்த்துள்ளார் அதன்படி பார்வையில் கமலின் விருமாண்டி திரைப்படத்துக்காக அவர் சுமார் 1.75  லட்சம் செலவு செய்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதனைத் கரு. பழனியப்பன் அவர்கள் கூறிய வீடியோ பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.