சினிமா உலகில் தொடர் வெற்றியைக் கண்ட இயக்குனர்கள் கூட ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் இருக்கிறாரா இல்லையா என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார். காரணம் இவர் அண்மை காலமாக எந்த ஒரு படத்தையும் இயக்காமல் இருப்பது தான் என சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா உலகில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து ஓடி கொண்டிருந்தார் ஏ ஆர் முருகதாஸ். இவர் முதலில் நடிகர் அஜித்தை வைத்து தீனா என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஏ. ஆர். முருகதாஸ் உச்ச நட்சத்திர நடிகர் ஆன நடிகர் விஜயுடன் கைகோர்த்து துப்பாக்கி, சர்க்கார் போன்ற படங்களை கொடுத்து தன்னை மிகப் பெரிய அளவில் பிரபலப்படுத்திக் கொண்டார்.
ஒரு கட்டத்தில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கைகோர்த்து தர்பார் என்னும் படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. அதன் பிறகு தமிழ் சினிமாவில் படமே இயக்காமல் இருந்து வருகிறார் இதற்கு மேலும் நாம் படம் இயக்காமல் போனால் தமிழ் சினிமாவில் இருக்கிறோமா.. இல்லையா.. என்ற கேள்விக்கு..
தள்ளப்படுவோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு ஒரு வழியாக ஏ ஆர் முருகதாஸ் தற்பொழுது ஒரு புதிய ஹீரோவுடன் கைகோர்த்து படம் பண்ண இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏ ஆர் முருகதாஸ் முதல் முறையாக சிம்புவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது இந்த படத்தின் கதை..
மும்பையில் இருக்கும் ஒரு நிறுவனம் பற்றிய ஒரு கதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது அதில் சிம்பு தொழிலதிபராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும் இணைந்தால் நிச்சயம் அந்த படம் சூப்பர் ஹிட் அடிக்க வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் சொல்லி வருகின்றனர் ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை.