இப்பொழுது இருக்கும் அரசியலைப் பற்றி அப்பொழுது திரைப்படத்தின் மூலம் புட்டுப்புட்டு வைத்த இயக்குனர்கள்.! இதோ லிஸ்ட்.!

tamil-movie-tamil360newz
tamil-movie-tamil360newz

Tamil political movie : அரசியல் என்றாலே பல பரபரப்பான விஷயங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் அதுவும் பல கட்சிகள் இருந்தால் சொல்லவே தேவையில்லை அந்த அளவு பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது, தற்பொழுது இருக்கும் அரசியல் பற்றி நம் இயக்குனர்கள் அப்பொழுதே படங்களாக எடுத்து அதில் பல திருப்பங்களையும் வைத்துள்ளார்கள்..

மக்களாட்சி – மக்களாட்சி திரைப்படத்தில் மம்முட்டி நடித்திருப்பார் அந்த திரைப்படத்தில் ஒரு சீனில் மம்முட்டி பேசும் பொழுது வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என மம்முட்டி கூறுவார், அதற்கு அதிகாரி ஒருவர் மதுவிலக்கை கொண்டு வந்தால் அரசுக்கு 200 கோடி வருமானம் இழப்பு ஏற்படும் இப்ப வரியும் போடலன்னா எப்படி வருமானம் வரும் என்று கேட்கிறார்.

அவருக்கு மம்முட்டி நீங்கள் ஏன் உங்க நிலத்திற்கு 10 லட்சம் வாங்கி 50 ஆயிரத்துக்கு பதிவு செய்கிறீர்கள்? 13% வரையில்தான் ஆறாயிரத்து சொத்து வரி கட்ட நீங்க அதை குறைத்து 4% வரி என்று சொல்லியிருந்தால் ஒழுங்கா 40,000 கட்டிரீப்ப்பிங்க, இப்படி வரியை ஏற்றி ஜனங்க அரசாங்கத்தை ஏமாற்றுவதை விட வரியை குறைத்தால் ஒழுங்கா வசூல் செய்தாலே அரசாங்கத்திற்கு 200 கோடி ரூபா தாராளமாக வரும், அப்புறம் அவங்க ஆட்சி வரும் இவங்க ஆட்சி வரும் என சொல்லுமே ஜனங்கள் தவிர மக்களாட்சி வரும் என மம்முட்டி கூறியிருப்பார்.

அமைதிபடை – நடிகர் மணிவண்ணன் அமைதிப்படை திரைப்படத்தில் சத்யராஜை தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றி பெறச் செய்வார் தேங்காய் பொறுக்கிக் கொண்டிருந்த சத்யராஜ் போட்டியில் வெற்றி பெற்று நாகராஜசோழன் ஆக வந்து நிற்பார், அதிலும் ஒரு சீனில் மனு தாக்கல் செய்யும் பொழுது பெயர் கொடுக்கும் பொழுது ராஜ பரம்பரை என சொல்வதும் முதலில் மணிவண்ணனுக்கு மரியாதை கொடுப்பார் சத்யராஜ் அதன்பிறகு அவர் முகத்திலேயே சிகரெட் புகையை ஊதுவது மாஸாக இருக்கும்.

அடிமட்டத்தில் இருக்கும் ஒருவன் தலைவனாக வருவது அட்டகாசமாக நடித்துக் காட்டினார் சத்யராஜ், சத்யராஜ் கூடவே இருந்து ஆலோசனை வழங்கி மணிவண்ணன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார், இந்த அரசியலை நிஜ சூழலில் பொருத்திப் பார்த்தால் உங்களுக்கே புரியும்.

முதல்வன்- ஒரு நாள் முதல்வர் என்பது எப்படி சாத்தியம் என்பதை மிக அழகாகவும் தெளிவாகவும் இயக்குனர் ஷங்கர் திரையில் காட்டி இருப்பார், இந்த திரைப்படம் முதன்முதலில் ரஜினியிடம் சென்று பின்பு விஜய்யிடம் சென்று அதன் பிறகுதான் அர்ஜுனுக்கு கிடைத்தது, அர்ஜுனுக்கு எந்த ஒரு அரசியல் பின்புலமும் இல்லாத காரணத்தினால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

இந்த திரைப்படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ரகுவரன் அவருக்கு உதவியாளராக இருக்கும் மணிவண்ணன் போன்றவர்கள், தற்பொழுது உள்ள ஏதோ ஒரு அரசியல் பிரமுகர்களை கொண்டு தான் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொடி – அரசியலில் பெரிய அளவில் வேலை செய்துவரும் அண்ணன் தனுஷ் அவரை காதலிக்கும் திரிஷாவும் அரசியலில் நுழைய வேண்டும் என எதிர்பார்க்கறார் ஒரு காலகட்டத்தில் திரிஷா தனக்கு போட்டியாக அண்ணன் தனுஷ் இருக்கிறார் என தெரிந்து தனுஷை  குத்தி கொள்கிறார். பின்பு அண்ணனை இழந்த தம்பி தனுஷ் நேராக கட்சியில் சேருகிறார் சாதுவாக இருந்த தம்பி நல்லா அரசியலையும் கற்றுக்கொண்டு திரிஷா முன் வந்து நிற்கும் சீன் எங்கேயோ பார்த்த மாதிரி உங்களுக்கு தோன்றும்.

என் உயிர் தோழன் – இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு தொண்டனின் அரசியல் திரைப்படமாக உருவானது, பாரதிராஜாவின் கைவண்ணத்தில் இந்த திரைப்படம் நல்ல பெயர் பெற்றது, இந்த திரைப்படம் அந்த காலத்தில் சரியாக ஓடவில்லை என்றாலும் இந்த காலத்து அரசியலுடன் ஒப்பிட்டு பார்க்கலாம்.