தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு கார்த்தி தமன்னா நடிப்பில் வெளியாகிய சிறுத்தை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிறுத்தை சிவா. இவர் தமிழில் சிறுத்தை திரைப்படத்தை இயக்குவதற்கு முன்பு தெலுங்கில் இரண்டு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கிய முதல் திரைப்படம் வெற்றி அடைந்ததால் இதனைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து வீரம் திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படமும் வெற்றி பெற்றதால் மீண்டும் சிறுத்தை சிவா அவர்களுக்கு அஜித் வாய்ப்பு கொடுத்தார்.
தொடர்ந்து வேதாளம், விவேகம், விசுவாசம் என அனைத்து அஜித் திரைப்படத்தையும் இயக்கி வந்தார். தல அஜித்துடன் நான்கு திரைப்படங்களில் பணியாற்றிய ஒரே ஒரு இயக்குனர் என்றால் அது சிறுத்தை சிவா மட்டும்தான் இவர்கள் இயக்கத்தில் விவேகம் திரைப்படத்தை தவிர மற்ற அனைத்து திரைப்படங்களும் மரண மாஸ் ஹிட் என்று கூறலாம்.
இந்த நிலையில் ஐந்தாவது முறையாக தல அஜித் தனக்கு பட வாய்ப்பு தருவார் என காத்துக் கொண்டிருந்தார் சிறுத்தை சிவா ஆனால் தற்பொழுது அண்ணாத்த படத்தில் படு பிசியாக இருக்கும் சிறுத்தை சிவா அந்த படத்தை முடித்த பிறகு தல 61 திரைப் படத்தை இயக்குவதாக இருந்தார்.
தல 61 திரைப் படத்தை சிறுத்தை சிவா இயக்குவதற்காக தல அஜித் அவர்களும் பச்சைக்கொடி காட்டியதாக கூறப்படுகிறது ஆனால் தற்பொழுது வலிமை திரைப்படத்தை பார்த்துவிட்டு தொடர்ந்து வினோத் அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதாக முடிவு செய்துள்ளார் அஜித்.
இதனால் சிறுத்தை சிவா முன்னணி நடிகரின் பட வாய்ப்பு கிடைக்காததால் செம அப்செட்டில் இருக்கிறார். ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா யார் திரைப்படத்தை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்து வருகிறது.