ரட்சிதாவுடன் விவாகரத்தான நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து முதல் முறையாக வாயை திறந்த தினேஷ்.!

ratchitha-makalakshmi
ratchitha-makalakshmi

சின்னத்திரையில் தனது சிறந்த நடிப்பு திறமையினாலும் அழகினாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. சின்னத்திரைக்கு ரீல் ஜோடிகள் அறிமுகமாகிய பலர் ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் ரீல் ஜோடிகளாக நடித்து வந்து பிறகு ரியல் ஜோடியாக மாறியவர்தான் ரஞ்சிதா மற்றும் தினேஷ்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமடைந்த இவர் அதன் பிறகு ஏராளமான சீரியல்களில் நடித்த பிரபலமடைந்தார் தற்பொழுது இவர் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் மற்றும் ரட்சிதா இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன்  திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் செய்துக்கொண்டு சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் பிரிந்தார்க்கள் மேலும் தற்பொழுது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள். மேலும் கருத்து வேறுபாடு காரணத்தினால் தனித்தனியாக தான் வாழ்ந்து உள்ளார்கள் அதன் பிறகு தான் சோசியல் மீடியாவில் நாங்கள் பிரிந்து விட்டதாக அறிவுத்திருந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் ரட்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. தற்பொழுது தினேஷிடம் இது குறித்து பிரபல பத்திரிகை ஒன்று எடுக்க அதில் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் தினேஷ்.

அதாவது வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல எங்களது வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது இந்த பிரிவு தற்காலிகமானது என நான் நம்புகிறேன் காலம் அனைத்தையும் மாற்றம் என்ற நம்பிக்கையில் தான் ஒவ்வொரு நாளையும் கடந்து வருகிறேன் எனக் கூறியுள்ளார்.

ரட்சிதா இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாக வெளியான தகவலை குறித்து கேட்டதற்கு வெறும் வாயை மெல்தற்குவதற்கு அல்வா கிடைத்தால் சும்மா விடுவார்கள் என்று கூறியுள்ளார் மேலும் நானும் சரி ரட்சிதாவும் சரி சட்ட ரீதியாக பிரிவதற்கு எந்த ஒரு முயற்சி செய்யும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.