கிட்டத்தட்ட தல மாதிரிதான் விஜயும் பிரபல கிரிக்கெட் வீரர் ஒரே போடு.! யாருப்பா அது இப்படி தாறுமாறா புகழுறது

vijay 61
vijay 61

தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது இதனைத்தொடர்ந்து அடுத்ததாக நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருந்தார் இந்த  திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதற்கு காரணம் நெல்சன் கதைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பதுதான் என பலரும் கூறுகிறார்கள்.

என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பீஸ்ட் திரைப்படம் வணிகரீதியாக வெற்றி பெற்றுள்ளது என பலரும் கூறி வருகிறார்கள் அதற்கு காரணம் படத்தை குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து பார்த்தார்கள் ரசிகர்கள். சமீபத்தில் கூட எஸ் ஜே சூர்யா அவர்கள் ஒரு பேட்டியில் விஜய் திரைப்படத்திற்கு மட்டும் குடும்பங்களுடன் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வருகிறார்கள் மக்கள் எனக் கூறியிருந்தார்.

இப்படி எஸ் ஜே சூர்யா கூறியது சினிமா பிரபலங்கள் இடையே மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது இந்நிலையில் தல தோனி மாதிரி தான் விஜய் என பிரபல கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தோனி கிரிக்கெட் மைதானத்திற்கு வந்தாலே போதும் அரங்கமே அதிரும் அந்த அளவு கைதட்டல் அதிகமாக இருக்கும்.

அப்படித்தான் தளபதி விஜய்யும் திரையில் தளபதி விஜய் தோன்றினாலே போதும் திரையரங்கமே ரசிகர்களின் கைதட்டலால் அதிரும்  அந்த அளவு விஜய் ரசிகர்கள் விஜய் மீது அதிக அன்பு வைத்துள்ளார்கள் அதேபோல் விஜய் திரைப்படம் திரையரங்கிற்கு வந்தால் வேறுயார் திரைப்படம் போட்டிக்கு வந்தாலும் அது செல்லுபடியாகாது என ரசிகர்கள் கூறுவார்கள். அதேபோல்தான் தளபதி விஜய்யும் கேஜிஎப் திரைப்படம் வருகிறது என கொஞ்சம் கூட பின்வாங்காமல் தைரியமாக தனது திரைப்படத்தை வெளியிட்டார்.

இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் இவ்வாறு கூறியது விஜய் ரசிகர்களிடையே சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

dinesh karthik
dinesh karthik