வெள்ளித்திரை பிரபலங்களை விட சின்னத்திரை நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் பிரபலமான நடிகை தான் ரட்சிதா மகாலட்சுமி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமான இவர் பிறகு இதனை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான இவர் இந்நிகழ்ச்சியின் மூலம் இறுதிவரை சென்றார். மேலும் இவர் நிகழ்ச்சியில் ராபர்ட் மாஸ்டருடன் கிசுகிசுப்பில் சிக்கினார் பிறகு நாங்கள் இருவரும் வெறும் நண்பர்கள் தான் என வதந்திகளுக்கு ரட்சிதா முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகை ரட்சிதா தன்னுடன் சீரியலில் நடித்து வந்த ஹீரோ தினேஷை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில வருடங்கள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை இப்படிப்பட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இருந்தாலும் ரட்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெறும் பொழுது அவருக்கு ஆதரவாக தினேஷ் பேசி வந்தார். எனவே இதனால் இருவரும் விரைவில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரட்சிதாவின் தரப்பில் இருந்து எந்த ஒரு முயற்சியும் சேர்வதற்காக எடுக்கப்படவில்லை எனவே தினேஷ் ரச்சிதாவை வெறுத்துள்ளார்.
எனவே இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடலாம் என முடிவெடுத்து உள்ளனர் அந்த வகையில் ரட்சிதா கணவர் தினேஷ் தற்பொழுது விவாகரத்துக்கு அப்ளை செய்து விட்டதாகவும் விரைவில் இவர்கள் விவாகரத்து பெற்று சட்டபூர்வமாக பிரிந்து விடுவார்கள் எனவும் இவர்களுடைய நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றனர்.