அவருடைய படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் என்னை கூப்பிட மாட்டார்.! ஆதங்கத்துடன் காரணத்தை கூறிய டிக்கிலோனா பிரபலம் மாறன்.!

sivakarthikeyan
sivakarthikeyan

சினிமாவில் நுழைவது ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் கடினமான ஒன்று ஆனால் சமீபகாலமாக மிகவும் எளிதாக சினிமாவில் நுழைந்து விடுகிறார்கள். அந்த வகையில் ஆரம்ப காலகட்டத்தில் ஒவ்வொரு தொலைக்காட்சிகளும் மக்களையும் ரசிகர்களை கவர்வதற்காக காமெடி நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ என ஒளிபரப்பி வந்தார்கள் அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பணியாற்றிய பலரும் சினிமாவில் நுழைந்து விட்டார்கள் அதுமட்டுமில்லாமல் நடிகர்கள் காமெடி நடிகராக நடித்து வருகிறார்கள் சினிமாவில். சொல்லப்போனால் நடிகர் சந்தானம் கூட லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் தான் இந்த  நிகழ்ச்சியில் பல காமெடிகளை செய்த பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. சினிமாவில் காமெடி நடிகராக நடித்து வந்த சந்தானம் ஒரு காலகட்டத்தில் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

சந்தானம் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் லொள்ளு சபா மாறன் நடித்திருப்பார். சமீபத்தில் வெளியாகிய டிக்கிலோனா திரைப்படத்திலும் மாறன் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தில் ஒரு சில நிமிடங்களில் மட்டுமே இவரின் காட்சி தோன்றினாலும் அந்த காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த காட்சி படத்தில் இருந்து டெலிட் செய்யப்பட்டுள்ளது அந்த காட்சி சமீபத்தில் வெளியானது அதுவும் ரசிகர்களை ரசிக்க வைத்தது.

மேலும் எதற்காக மாறன் காட்சியை நீக்கினார்கள் இன்னும் அதிகமாக காட்சியை வைத்திருந்தால் படம் நன்றாகவே இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள் இந்த டிக்கிலோனா திரைப்படத்தில் மாறன் ஒரு பைத்தியக்காரனாக நடித்திருப்பார். அப்பொழுது நீ இன்னும் என்னை பைத்தியக்காரனவே  நினைச்சுகிட்டு இருக்கல்ல என்ற ஒரே ஒரு வசனம் தற்பொழுது நெட்டிசன்களுக்கு மீம்ஸ் மெட்டீரியல் ஆக கிடைத்துவிட்டது.

பல வருடங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்ற மாறன் செய்த காமெடிகள் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது இந்த நிலையில் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் மாறன் சிவகார்த்திகேயன் படங்களில் நடிப்பதற்கு என்னை கூப்பிட மாட்டார் என மிகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நான் சந்தானத்தின் டீமில் இருக்கிறேன் அதனால் அவருடைய திரை படத்தில் என்னை நடிக்க கூப்பிட மாட்டார் நடிக்க கூப்பிட்டால் நன்றாக இருக்காது என எண்ணி விட்டுவிடுகிறார்கள் விவேக்கின் பல காட்சிகளில் நடித்த செல் முருகன் வேறு எந்த நடிகரின் திரைப்படத்திலும் நடித்திருக்க மாட்டார் ஏனென்றால் மற்ற நடிகர் திரைப்படத்தில் செட்டாக மாட்டார் அதே போல் தான்.

ஆனால் நடிகர் சிவகார்த்திகேயன் உடைய படத்தில் நடிக்க கூப்பிட்டால் கண்டிப்பாக நடிப்பேன் என கூறியுள்ளார்.