பல கோடிக்கு விலைப்போன சூர்யா 42 படத்தின் டிஜிட்டல் சேட்டிலைட் உரிமம்..! வாயடைத்துப்போன ரசிகர்கள்

surya
surya

நடிகர் சூர்யா எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தொடர்ந்து பாலா உடன் கைகோர்த்து வணங்கான் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வந்தார். இந்த படம் மீனவர்கள் சம்பந்தப்பட்ட படமாக உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வந்தது. படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பல வாக்குவாதங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் கூறப்பட்டன.

இதனை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பை பாதியிலே நிறுத்தி விட்டு சூர்யா அடுத்த படத்திற்கான பூஜையை திடீரென சிறுத்தை சிவா உடன் போட்டுள்ளார். சூர்யாவின் 42வது படமான இதை ஞானவேல் ராஜா தயாரித்து வருகிறார் இந்த படம் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் என மொத்தம் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இதில் சூர்யா உடன் இணைந்து முதல் முறையாக பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முதலில் சென்னையில் நடைபெற்றது அதை தொடர்ந்து அடுத்ததாக கோவாவிற்கு சென்றது. மீண்டும் தற்போது சென்னையில் இந்த படத்தின் சூட்டிங் பரபரப்பாக நடந்தும் வருகிறது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷப்படுத்தியதோடு அடுத்தடுத்த பல அப்டேட்டுகளும் வெளிவர இருக்கின்றன.

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் ஹிந்தி உரிமை பல கோடிக்கு விக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 42வது படத்தின் ஹிந்தி சேட்டிலைட் டிஜிட்டல், தியேட்டர் உரிமம் ஆகியவற்றை 100 கோடி கொடுத்து பெண் ஸ்டுடியோ நிறுவனம் வாங்கி இருக்கிறது. இந்த செய்தி தற்போது பலரையும் சந்தோஷப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஆச்சரியமாக்கியும் உள்ளது. சூர்யாவின் இந்த 42 வது திரைப்படத்தின் ஹிந்தி சாட்டிலைட் உரிமம் இவ்வளவு விலை போனதற்கு காரணம் தமிழில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரறை போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று தேசிய விருதை அள்ளியது.

தற்போது சூர்யா அந்த படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்து வருகிறார். ஹிந்தியில் இந்த படத்திற்கான வரவேற்பு அமோகமாக இருக்கிறது இதன் காரணமாக தான் சூர்யாவின் அடுத்த படம் ஹிந்தி ரீமேக் இவ்வளவு விலை போனது என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஹீரோயினாக பாலிவுட் பிரபல நடிகை திஷா பதானி நடித்து வருவதால் பாலிவுட்டிலும் அடுத்து சூர்யாவின் வரவேற்பு அதிகரிக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல சிறந்த இயக்குனர்களுடன் நடிக்க உள்ளார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது