சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்துவரும் லைக்கா நிறுவனம் தற்போது ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது இதை பார்த்த அஜித் ரசிகர்கள் செம்ம கடுப்பாகி இருக்கிறார்கள். அதாவது ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தின் புதிய அப்டேடே லைக்கா நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
இவர் இயக்கத்தில் வெளியான 3 மற்றும் வை ராஜா வை ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது இதனை தொடர்ந்து இவர் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிகை ரீமா சென்னுக்கு டப்பிங் பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனுசை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்ற பின் தனது முழு நேரத்தையும் சினிமாவில் செலுத்தி வருகிறார் அது மட்டுமல்லாமல் இத்தனை ஆண்டுகளாக தங்களுடைய மகன் வளர வேண்டும் என்பதற்காக சினிமா பக்கம் வராமல் இருந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து தற்போது ஐஸ்வர்யா ரஜினி படத்தை இயக்க வந்திருக்கிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு லால் சலாம் என டைட்டில் வைக்கப்பட்டிருக்கிறது மேலும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கின்றனர்.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினி அவர்கள் கௌரவ தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். படபிடிப்பு இன்று தொடங்க உள்ளதாக தற்போது லைக்கா நிறுவனம் ஒரு அப்டேட்டை வெளியிட்டு இருக்கிறது இதை பார்த்து தான் அஜித் ரசிகர்கள் கொந்தளித்து இருக்கிறார்கள்.
ஏனென்றால் லைக்கா நிறுவனம் ஏகே 62 திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறது இதனால் இதுவரைக்கும் ஏகே 62 திரைப்படத்திலிருந்து எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது அது மட்டுமல்லாமல் லைக்கா நிறுவனம் தற்போது தயாரிக்கும் படங்களின் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது ஆனால் இதுவரைக்கும் ஏகே 62 திரைப்படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கிறது இதனால் தான் லைக்கா நிறுவனத்தை ரசிகர்கள் திட்டி வருகிறார்கள் என்று கூறப்படுகிறது.