தமிழ் சினிமாவில் நல்ல கதையம்சமுள்ள புது புது திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் இயக்குனர் செல்வராகவன் இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தனுஷின் அண்ணன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.
இவர் தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல சிறந்த கதையம்சம் உள்ள திரைப்படங்களை இயக்கியது மட்டுமில்லாமல் இதன் மூலமாக தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.
மேலும் இயக்குனர் செல்வராகவன் பல வருடங்கள் கழித்து மீண்டும் தனுஷை வைத்து இயக்கி வரும் ஒரு புதிய திரைப்படம் தான் நானே வருவேன் என்ற திரைப்படம் இந்த திரைப்படம் பல வருடங்கள் கழித்து தனுஷுடன் இணைந்து உருவாக்குவதன் காரணமாக இத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை கொடுத்தது மட்டும் இல்லாமல் சமீபத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றிய பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் கூறியது என்னவென்றால் நானும் தனுஷும் இணைந்து நல்ல ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்தோம் அந்தவகையில் புதுப்பேட்டை இரண்டாம் பாகம் எடுக்கலாமா என பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் சுமார் ஆறு மாதங்கள் இதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம் பின்பு தனுஷ் ஒரு கதையுடன் என்னிடம் வந்தார் அதுமட்டுமில்லாமல் அந்த கதை எனக்கு மிகவும் பிடித்தது காரணமாக அந்தக் கதைக்கு திரைக்கதை வசனம் எழுதி உள்ளேன்.
அப்படி என்றால் நானே வருவேன் என்ற திரைப்படத்தின் கதை செல்வராகவன் எழுதியது கிடையாது தனுஷ் உடையதுதான் என பல ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.