நடிகர் விஜய் சேதுபதி தற்போது டிஎஸ்பி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக தளபதி 67 திரைப்படத்தில் இணைய உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி கடைசியில் சந்தானம் கதாபாத்திரம் இறக்கும் காட்சியை காட்டாமல் இருந்திருப்பார் லோகேஷ் கனகராஜ் இதனால் விஜய் சேதுபதியின் ரசிகர்களும் நெட்டிசங்களும் தளபதி 67 திரைப்படத்தில் ஒருவேளை வருவாரா சந்தானம் என்று கூறி வருகின்றனர்.
தளபதி 67 திரைப்படம் எல்சியு லோகேஷ் சினிமாடெக் யுனிவர்ஸ் படங்களுடன் இணைந்து உருவாக இருக்கிறது இந்தப் படம் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா நடிக்க மாட்டாரா என்று டுவிட் செய்து வந்தனர் அவருடைய ரசிகர்கள்.
இதற்கு விளக்கம் அளித்த விஜய் சேதுபதி ஒரு பேட்டியில் சந்தானம் கதாபாத்திரம் விக்ரம் திரைப்படத்தோட முடிந்துவிட்டது இனி இந்த கதாபாத்திரம் வந்தால் மக்களுக்கு பிடிக்காமல் போகிவிடும். அதுமட்டுமல்லாமல் தளபதி 67 திரைப்படத்தில் நான் நடிப்பதை பற்றி லோகேஷ் கனகராஜ் என்னிடம் எதுவும் கூறவில்லை. சந்தானம் கதாபாத்திரம் தொடர நானும் விரும்பவில்லை என்று அந்த பேட்டியில் காரராக கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.
சினிமாவில் நடித்தால் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்ற நடிகர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருந்த விஜய் சேதுபதி இனி வில்லனாக எந்த ஒரு படத்திலும் நடிக்க மாட்டேன் என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இதை மனதில் வைத்துக் கொண்டுதான் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்காமல் இருக்கிறார் என்று ஒரு பக்கம் வதந்தி வெளியாகியுள்ளது.