தனது தந்தை வழியை பின்பற்றி வரும் தமிழ் சினிமா பிரபலங்களில் ஒருவர் தான் துருவ் விக்ரம் இவர் இவரது தந்தை விக்ரமின் வழியில் வலம் வருகிறார் என்று தான் கூறவேண்டும். இவரது தந்தை போலவே ஆரம்ப காலகட்டத்தில் நிறைய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் மேலும் விக்ரம் மற்றும் இவரும் இணைந்து நடித்து வரும் திரைப்படம் தான் மகான்.
இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என பல ரசிகர்களும் காத்து கிடக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தின் கதை மிகவும் அற்புதமாக இருக்கும் மேலும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இயக்கி வருகிறாராம்.
இதனைத்தொடர்ந்து இந்தத் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறாராம் .மேலும் மகான் திரைப்படத்தின் இரண்டு மோஷன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருக்கலாம்.
குறிப்பாக இதில் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் ஆகிய இருவர்களும் எதிரியாக நடிக்க வாய்ப்பு இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள்.துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான ஆதித்யா வர்மா என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் இவருக்கு தொடர்ச்சியாக தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறது.
இந்நிலையில் மகான் திரைப்படத்தில் விக்ரம் மற்றும் இவரும் சேர்ந்து நடிக்கும் பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து இவர்கள் 2 பேரும் எப்படி இருக்கிறார்கள் பார்த்தீர்களா என கேட்டு வருகிறார்கள்.