விவேக் மறைந்த தினத்தில் விஜய் செய்த செயலை பார்த்தீர்களா.! ட்ரெண்டாகும் தகவல்

திரையுலகினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்திய ஒன்று நடிகர் விவேக்கின் மரணம். இவர் கடந்த 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். நடிகர் விவேக் பொதுவாக சினிமாவையும் தாண்டி சமூக நலன் மீது மிகவும் அக்கறை உடையவர்.

அந்த வகையில் எந்த நல்ல விஷயமாக இருந்தாலும் அதனை ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்தவகையில் மரக்கன்று நட வேண்டும் என்பதற்காக ஒரு கோடி மரக்கன்று நானே நடுவே நின்று புதிய அவதாரம் ஒன்றையும் எடுத்தார்.

அந்த வகையில் 33 லட்சத்தையும் தாண்டி மரக்கன்றுகளை நட்டு உள்ளார். தற்பொழுது பல திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் விவேக்கின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக ஒரு கோடி மரக்கன்றுகளை நட உள்ளார்கள்.

இதனைத்தொடர்ந்து கொரோனா தாக்கம் அதிகரித்தால் மாஸ்க் போட வேண்டும் என்பதற்காக அதைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அந்த வகையில் தான் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் விவேக்.

விவேக்கிற்கு ஏற்கனவே இதயத்தில் அடைப்பு இருந்ததாகவும் கொரோனா தடுப்பூசி போட்டவுடன் மாரடைப்பு ஏற்பட்டு விட்டதாக்கவும் கூறப்படுகிறது. எனவே இவர் கண்டிப்பாக குணமடைந்து விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்த அனைவருக்கும் மறுநாள் பெறும் அதிர்ச்சிதான் ஏற்பட்டது.

விவேக்கின் இழப்பு தாங்க முடியாமல் தற்போது வரையிலும் பலர் தங்களது இரங்கலை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தநிலையில் விவேக் இறந்ததும் தளபதி 65 திரைப்படத்தின் படக்குழுவினர்கள் படப்பிடிப்புகளை நிறுத்தி விட்டார்களாம்.

பிறகு இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது படப்பிடிப்பு முடிந்து இரு தினங்களுக்கு முன்பு தான் விஜய் சென்னை வந்தார். வந்தவுடன் விவேக்கின் வீட்டிற்கு சென்று அவரின் குடும்பத்தினருக்கு தைரியத்தை கூறியுள்ளார்.