விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ளது.தற்பொழுது முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. முதல் சீசனை விட இரண்டாவது சீசன் தான் மிகவும் சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் அஸ்வின். இந்நிகழ்ச்சி அவருக்கு லக் என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் இவர் இந்நிகழ்ச்சி இருக்கும் முன்பு இரட்டைவால் குருவி என்ற சீரியலில் நடித்து இருந்தார்.
இதனைத் தொடர்ந்து நடிகர் துரு நடிப்பில் வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படத்தில் துருக்கு அண்ணனாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆனால் படங்கள், சீரியல்கள் என்று எதுவுமே சொல்லுமளவிற்கு அவருக்கு கைகொடுக்கவில்லை.பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.
இந்நிலையில் அஸ்வின் பிரபல ஹோட்டல் திறப்பு விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அவ்வபோது அங்கு இருந்த பெண் ரசிகைகள் ஒன்றாகக் கூடி அஸ்வினை சுற்றிவளைத்தனர். அதில் பெண் ரசிகர்கள் அஸ்வின் பயப்படாதீங்க நான் ஒன்னும் பண்ண மாட்டோம் என்று கூறினார். இதோடு அஸ்வினுக்கு ஆர்த்தியும் எடுத்தார்கள்.பாடலும் ஒரு ரசிகை படயுள்ளார்.
பிறகு அஸ்வின்னுடன் இணைந்து அனைவரும் செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அவ்வபோது எடுத்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.