தற்பொழுது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள ஒன்று நடிகர் விவேக்கின் மறைவு. இவர் நெஞ்சுவலி காரணமாக நேற்று தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4:45 மணி அளவில் இயற்கை எய்தினார். சிரிப்பால் சிந்திக்க வைத்த மாமனிதன் விவேக் மறைந்ததை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.
விவேக் இயக்குனர் பாலச்சந்திரனின் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார்.இதன் மூலம் பாலச்சந்திரன் தனது திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் விவேக்கை நடிக்க வைத்தார். விவேக்கின் சிறந்த காமெடி திறமையை பார்த்து பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தங்களது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார்கள்.
அந்தவகையில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்பொழுது வரையிலும் ஏராளமான முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து சினிமாவில் தனது முத்திரையைப் பதித்தார். இந்நிலையில் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக நலன்களிலும் மிகவும் அக்கறை உடையவர்.
அந்த வகையில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் இன்று அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அதோடு கொரோனா காலத்தில் மாஸ்க் அணிய வேண்டும் என்பதற்காக பல விழிப்புணர்வு வீடியோக்களையும் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் எதிர்பாராத விதமாக இவர் இன்று அதிகாலை உயிரிழந்ததால் பலருக்கும் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு நடிகர் விவேக்கிற்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தனது ரசிகர்களிடம் அனைவரும் முடிந்தவரை ஒரு மரக்கன்றாவது நடுங்கள் என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.