சந்தானம் நடித்த டிக்கிலோனா திரைப்படத்தை பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜ் என்ன பதிவுசெய்துள்ளார் பார்த்தீங்களா.!

தமிழ் திரை உலகில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு மாறிய நடிகர்களில் ஒருவர் தான் சந்தானம் இவர் ஆரம்ப காலகட்டத்தில் பலநடிகர்களுக்குநண்பனாக நடித்து வந்தார் பின்பு கதாநாயகனாக ஒரு சிலதிரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது கதாநாயகனாகவே பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தருகிறார்கள்.அதைப்போல் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் டிக்கிலோனா.

இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு பல சினிமா பிரபலங்களும் தங்களது கருத்துகளை கூறி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக சந்தானத்தின் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்த்து வந்தார்கள் இந்த திரைப்படம் வெளியானது அவர்களுக்கு ஒரு பெரிய விருந்தாகும்.

மேலும் நடிகர் சந்தானம் நடிப்பில் தற்போது ஒரு சில திரைப்படங்கள் நடைபெற்று வருகிறது இவரது நடிப்பில் எப்பொழுது பல திரைப்படங்கள் வெளியாகும் என பலரும் காத்துக் கொண்டு வந்தார்கள் இந்நிலையில் டிக்கிலோனா திரைப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்களது பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் மிகவும் நீண்ட நாள்களுக்கு பிறகு வேடிக்கையான ஒரு சிரிப்பு விருந்து தந்துள்ளது குறிப்பாக மாறன் மற்றும் மருத்துவமனை குழு வாழ்த்துக்கள் என சந்தானத்தை பாராட்டி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்தானம் என்றாலே கலக்கல் தான் அப்படி இருக்கும் நிலைமையில் இவர் நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் பல திரைப்படங்கள் இதே போல்தான் இருக்கும் எனவும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.