தமிழ் திரையுலகில் நிறைய திரைப்படங்களில் தனது சிந்திக்க வைக்கும் காமெடிகளை செய்து காட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்த நடிகர் என்றால் அது சின்ன கலைவாணர் நடிகர் விவேக் தான் இவர் கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி மாரடைப்பு காரணமாக நம்மைவிட்டு பிரிந்துவிட்டார் இவர் மறைந்தாலும் இவர் நடித்த திரைப்படங்கள் தற்பொழுதும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.
மாரடைப்பு காரணமாக இவர் மறைந்தது மக்களை அதிகமாக வருத்தத்தில் மூழ்கிவிட்டது அதுமட்டுமல்லாமல் இவர் மறைந்ததை ஜீரணிக்க முடியாமல் இவருடன் பழகி வந்த சினிமா பிரபலங்கள்,உறவினர்கள்,நண்பர்கள் போன்ற பலரும் இவருடன் இருந்த பொழுது எடுத்த வீடியோ,புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி வந்தார்கள்.
அந்த வகையில் பார்த்தால் அவருடன் பழகி வந்த மிகவும் நெருக்கமான நண்பர்கள் பலரும் அவரது வீடியோ காணொளியை வெளியிட்டு தங்களது வருத்தத்தை தெரிவித்து வந்ததை நாம் பார்த்திருப்போம்.நடிகர் விவேக் மறைந்தாலும் அவரது ஆசையை தமிழ்நாட்டு இளைஞர்கள் பலரும் செய்து வருகிறார்கள் இவர் இறுதியாக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து விட்டார்.
அப்துல் கலாம் ஐயா கூறிய பொன்மொழிக்கு ஏற்ப இவர் மரக்கன்றுகளை நடுவதில் அதிக ஆர்வம் காட்டினார் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவரது ஆசைகளும் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிக மரக்கன்றுகளை நட வேண்டும் என்பதுதான் அதேபோல் இவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் பல இளைஞர்களும் மரக்கன்றுகளை நட்டு வருகிறார்கள்.
மேலும் இவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரபல விஜய் டிவி நிறுவனம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளது அதில் பல சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள் அதேபோல் விவேக்கின் குடும்பத்தினரை நாம் அதிகமாக பார்த்து இருக்கலாம் ஆனால் அவரது அக்காவை நாம் பார்த்திருக்க முடியாது.
அந்த வகையில் தனது தம்பிக்காக இந்த நிகழ்ச்சியில் விவேக்கின் அக்காவும் கலந்து கொண்டுள்ளார் அப்போது அவர் பேசிய பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்தானா விவேக்கின் அக்கா என இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.