தமிழ் திரையுலகை பொருத்தவரை காமெடி நடிகராக பலரும் நடித்து வருகிறார்கள் ஆனால் அதில் ஒரு சில நடிகர்கள் திரைப்படங்களை இயக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி உள்ளார்கள் என்பது பலருக்கும் தெரியாத ஒன்று அந்த வகையில் பார்த்தால் இயக்குனர்,காமெடி நடிகர்,தயாரிப்பாளர் போன்ற பல திறமைகளைக் கொண்டு தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக விளங்கி வருபவர் தான் மனோபாலா இவர் காமெடி நடிகர் என்பது மட்டும்தான் மக்களுக்கு தெரியும்.
ஆனால் அதையும் தாண்டி இவர் நிறைய திரைப்படங்களை துணை இயக்குனராக இருந்து இயக்கி ஒரு சில திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார் அதுமட்டுமல்லாமல் இவர் ரஜினி,விஜய்,அஜித்,நாகேஷ் போன்ற எல்லா நடிகர்களுடன் திரைப்படத்தில் இணைந்து நடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலத்தில் இருந்து தற்போது வரை நடித்து வரும் பல நடிகர்களுடன் இவர் திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார் மேலும் இவர் சமூக அக்கறை கொண்ட கருத்துக்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்வது வழக்கம் தான் அந்த வகையில் இவர் எவ்வித கேப்ஷனும் இல்லாமல் படுத்திருப்பது போல் ஒரு புகைப்படத்தை பகிர அதைப் பார்த்த ஒரு சில ரசிகர்கள் அவரை தப்பாக விமர்சித்துள்ளார்கள்.
— Manobala (@manobalam) May 15, 2021
அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் உங்களுக்கு உடம்பு சரி இல்லையா சார் கொரோனாவா என கேட்டு பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்துள்ளார்கள் இதனை பார்த்த மனோபாலா அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உடனடியாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
என் அன்பு மக்களே…நான் ஏதோ ஒரு photoவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல..நான் நல்லாதான் இருக்கேன்..ஒண்ணுமில்லை…அன்பு காட்டிய ( அப்படிதான் சொல்லணும்) அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..
— Manobala (@manobalam) May 16, 2021
அதில் என் அன்பு மக்களே நான் ஏதோ ஒரு போட்டோவை போட அது இந்த லெவலுக்கு போகும்னு தெரியல நான் நல்லாத்தான் இருக்கேன் ஒன்னும் இல்லை அன்பு காட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள் என தெரிவித்துள்ளார் மேலும் இவர் பகிர்ந்து பதிவு தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.