தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் தனுஷ் இவர் தற்போது பல திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தமிழ் மட்டுமல்லாமல் ஹாலிவுட், பாலிவுட் என கலக்கிக் கொண்டிருக்கிறார்.மேலும் தனுஷ் திரைப்படத்தை இயக்குவதற்காக பல இயக்குனர்கள் கால்ஷீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தனுஷ் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக அன்றிலிருந்து இன்றுவரை வலம் வரும் ரஜினியின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இவர்கள் 18 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென இருவரும் இணைந்து விவாகரத்து செய்தியை வெளியிட்டுள்ளார்கள்.
இவர்கள் இந்த செய்தியை அறிவித்ததும் தமிழ் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமில்லாமல் பல பிரபலங்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறி வந்தாலும் ஒரு சில பிரபலங்கள் அவர்கள் முடிவை அவர்களை எடுத்துக்கொண்டார்கள் அதனால் என்ன எனவும் கூறி வருகிறார்கள். மேலும் இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் பலரும் ரஜினி அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்தியை அறிவித்த பிறகு அவரவர்கள் தங்களுடைய வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள் தமிழ் படங்களில் நடிப்பது மிகவும் பிசியாக இருக்கிறார் அதேபோல் ஐஸ்வர்யா அவர்கள் புதிதாக ஆல்பம் ஒன்றை உருவாக்குவதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறார் அதன் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற தாக தெரியவந்துள்ளது அதில் ஐஸ்வர்யா கலந்து கொண்ட போது எடுத்த புகைப்படம் தான் இது.