பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி கன்னி என கொண்டாடப்படுபவர் தான் நடிகை மல்லிகா ஷெராவத். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய அழகான கவர்ச்சி மற்றும் நடனத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
பொதுவாக இவருடைய நடிப்பு மற்றும் நடனத்தின் மூலமாக இந்திய முழுவதுமே பிரபலமானார் என்று கூட சொல்லலாம் அந்த வகையில் இவர் இந்தியா சினிமா மட்டுமின்றி சீனா மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற நமது நடிகையின் கவர்ச்சியை மட்டுமே பார்த்த நாம் தற்போது அவரை ராணி கதாபாத்திரத்தில் முதன்முதலாக பார்க்க உள்ளோம். பொதுவாக நமது நடிகை தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் மிக பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு கமலஹாசன் நடிப்பில் வெளியான தசாவதாரம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் வெளியான வாஸ்து என்ற திரைப்படத்தில் கூட கலாசலா பாட்டில் நடனம் ஆடி ரசிகர்களை கலக்கி எடுத்து இருப்பார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது இயக்குனர் வடிவுடையான் இயக்கத்தில் நாக்மதி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு திரில்லர் கதையம்சம் உள்ள திரைப்படமாக இருப்பது மட்டுமில்லாமல் நமது நடிகை 2 வேடங்களில் நடிக்க உள்ளார் அந்த வகையில் இவர் திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.