Did you see how Vishal is after Corona : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவி அனைத்து நாடுகளையும் நடுநடுங்க வைத்துவிட்டது, இதிலிருந்து மீள்வது எப்படி என உலக நாடுகளை தவித்து வருகிறது. அதேபோல் இந்த கொரோனா வைரஸ் இந்தியாவிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, அதுமட்டுமல்லாமல் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் இந்திய அரசு, அதேபோல் தமிழ்நாட்டிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்தநிலையில் கொரோவினால் பாதிக்கப்பட்ட விஷால் தற்பொழுது ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார், அதில் அவர் கூறியதாவது கொரோனாவுக்கு மிக முக்கியமான மருந்து பயப்படாமல் இருப்பது தான் என கூறியுள்ளார் விஷால்.
தற்பொழுது தமிழகத்தில் சென்னையைத் தாண்டி பிற மாவட்டங்களிலும் மிக வேகமாக கொரோனா தற்போது அதிகரித்து வருகிறது, இந்த தொற்று எண்ணிக்கை இரண்டு லட்சத்தை கடந்துவிட்டது இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் விஷாலுக்கும் அவருடைய தந்தை ரெட்டிக்கும் தோற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது ஆனால் இவர்களுக்கு 20 நாள்களுக்கு முன்பே கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொண்டு முழுமையாக குணமடைந்து விட்டதாக விஷால் தற்போது கூறியுள்ளார்.
மேலும் கொரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வையும் தான் மீண்டும் மீண்டு வந்தது எப்படி என்றும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.