தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் கமலஹாசன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தது மட்டுமல்லாமல் பிற மொழித் திரைப்படங்களிலும் நடித்து திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் ஏன் சமீபத்தில் அரசியல்வாதியாக கூட வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் இவர் சமீபத்தில் மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்துள்ளார்.
அந்தவகையில் இவர்களுடைய கூட்டணியில் தற்சமயம் உருவாகியுள்ள திரைப்படம் தான் விக்ரம் என்ற திரைப்படம் இந்த திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பது மட்டும் இல்லாமல் உடன் உதயநிதி ஸ்டாலினும் தயாரித்து வருகிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி பகத் பாசில் நடிப்பது இந்த திரைப்படத்தின் சிறப்பு அம்சமாக இருப்பது மட்டுமில்லாமல் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் பிரபல நடிகைகளாக வலம் வந்த ஷிவானி நாராயணன் மற்றும் மைனா நந்தினி போன்றவர்களும் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளார்கள்.
இவ்வாறு பிரம்மாண்டமாக உருவாகும் இந்த திரைப்படம் ஆனது கமலின் 232 வது திரைப்படம் ஆகும் இதில் விஜய் சேதுபதி தன்னுடைய வில்லத்தனமான நடிப்பை வெளிக் காட்டியது மட்டும் இல்லாமல் பகத் பாஸில் விஜய் சேதுபதி காப்பாற்றும் முயற்சியில் இருக்க கமல் அவற்றை முறியடிப்பதும் இந்த திரைப்படத்தின் கதையாகும்.
இந்நிலையில் இந்த திரைப்படத்துக்கான ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் அப்பொழுது தான் நடித்த தேவர் மகன் திரைப்படம் பற்றியும் பேசி உள்ளார் அதில் சிவாஜி கணேசன் நடித்த கதாபாத்திரத்தில் ஹிந்தி மொழி பெயர்ப்பில் பிரபல நடிகர் திலீப் குமார் அவர்களை நடிக்க கேட்டார்களாம் ஆனால் அவர் கடைசி வரை இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என மறுத்தது மட்டுமில்லாமல் அவருக்கு பதிலாக அம்ப்ரிஷ் புரி நடிக்க வேண்டியதாயிற்று.