தற்போது ஒவ்வொரு சேனல்களும் தன்னுடைய டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்துவதற்காக புது புது நிகழ்ச்சிகளை ஒளிபரப்பாக்கி கொண்டிருக்கிறார்கள் அந்த வகையில் தற்போது விஜய் டிவிக்கு போட்டியாக ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தி வரும் ஒரு நிகழ்ச்சிதான் சர்வைவர் நிகழ்ச்சி ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வழங்கி வருபவர் தான் நடிகர் அர்ஜுன். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் அதில் காடர்கள் வேடர்கள் என இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு பல்வேறு சவால்கள் கொடுக்கப்படும்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் எலிமினேஷன் உடன் சவால்கள் தொடங்கியுள்ளது. அந்த வகையில் பல்வேறு சர்ச்சைகளும் மோதல்களும் இந்த போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டு வருகிறது அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பிற போட்டியாளர்களின் குறித்து குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பெசன்ட் ரவி கலந்துள்ளார். இவருக்கு வயது முதிர்ந்ததன் காரணமாக இந்த போட்டியில் இருந்து அனுப்புவது நல்லது என சக போட்டியாளர்கள் கூறிவருகிறார்கள். அதற்கு பெசன்ட் ரவி மகள் ஸ்வேதா அவர்கள் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.
அதாவது அவர் கூறியது என்னவென்றால் படத்தில் என்னப்பா வில்லனாக நடித்ததன் காரணமாக நிஜத்திலும் அப்படிதான் என நினைக்கிறார்கள் ஆனால் நிஜத்தில் என் அப்பா ஒரு ஹீரோ போல தான் அதுமட்டுமில்லாமல் போட்டியாளர்கள் பலரும் என் அப்பாவுக்கு வயதாகி விட்டது என கூறுகிறார்கள்.
ஆனால் என் தந்தை என் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது என்னுடைய அப்பா நிஜ வாழ்க்கையிலும் சர்வைவர் தான் என கூறி உள்ளார் இவ்வாறு இவர் வெளியிட்ட கருத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில் அவருடைய மகள் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.