சர்ஜரி செய்வதற்கு முன்பு அதிதி ராவ் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

இந்திய சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் அதிதி ராவ்  இவர் இந்தி, தமிழ் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார் தமிழில் முதன் முதலாக 2007ஆம் ஆண்டு வெளியாகிய சிருங்காரம் என்னும் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் தேவதாசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

மேலும் அதிதி ராவ் மணிரத்தினம் இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியாகிய காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு சிம்பு, சேதுபதி ஆகியோர்கள் நடிப்பில்  மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய செக்கச் சிவந்த வானம் என்ற திரைப்படத்திலும் நடித்து இருந்தார்.

பார்ப்பதற்கு  அழகாக இருக்கும் அதிதி ராவ் அவர்களுக்கு தமிழில் பெரிதாக எந்த ஒரு திரைப்படமும் அமையவில்லை இந்த நிலையில் ஏதாவது பட வாய்ப்பு அமையும் என சமூக வலைத்தளத்தில் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இவரின் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மூக்கும் முழியுமாக இருக்கும் அதிதி ராவ் ஒரு காலத்தில் மூக்கை சர்ஜரி செய்துள்ளாராம் இந்த புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

மேலும் அதிதி ராவ் அவர்கள் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் மேலும் ஒரு சில முன்னணி இயக்குனர்களின் திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாக கூறப்படுகிறது. மூக்கை சர்ஜரி செய்வதற்கு முன்பு அதிதீ ராவ் எப்படி இருந்துள்ளார் பார்த்தீர்களா.

Leave a Comment