90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை லலிதா குமாரி. இவர் 1987ஆம் ஆண்டு வெளிவந்த மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து இவர் வீடு மனைவி மக்கள், புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, உலகம் பிறந்தது எனக்காக உட்பட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.
இவர் கிட்டத்தட்ட தமிழில் மட்டும் 35 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் வாரிசு நடிகையாக தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அந்த வகையில் பிரபல நடிகர் சி எல்.ஆனந்தின் மகளும் மற்றும் பிரபல நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கு எளிதில் சினிமாவில் பிரபலமடைய ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
இந்நிலையில் இவர் 1994ஆம் ஆண்டு தமிழில் நடிகராகவும், வில்லனாகவும் கலக்கி வரும் பிரகாஷ் ராஜை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு இவர் பெரிதாக சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் இந்த தம்பதியர்களுக்கு பூஜா, மேக்னா என்ற மகளும் சித்து என்ற மகனும் உள்ளார்கள்.
இந்நிலையில் சித்து 2004-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இந்நிலையில் பிரகாஷ்ராஜ் மற்றும் லலிதாகுமாரி இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணத்தினால் 2009ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள். இந்நிலையில் லலிதா ராஜ்குமார் பல ஆண்டுகளாக சினிமா பக்கம் தலை காட்டாமல் தனது குடும்பத்தை பார்த்து வந்தார்.
இப்படிப்பட்ட நிலையில் சில ஆண்டுகள் கழித்து இவரின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. இப்புகைப்படத்தை பார்த்து இவர்தானா லலிதா ராஜ் குமாரி என்று ஆச்சரியப்பட்டு வந்தார்கள். அந்த அளவிற்கு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார். இவர் நடிகர் செந்தில் கவுண்டமணி உடன் ஒரு காமெடி திரைப்படம் ஒன்றில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் கவுண்டமணிக்கு தங்கையாக கருப்பு நிற பெயிண்ட் அடித்த நடிகையாக நடித்து இருந்தவர் தான் லலிதா குமாரி என்பது குறிப்பிடத்தக்கது.