தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தொடர்ந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களை தந்து வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் வசூல் சக்கரவர்த்தியாக வளம் வந்து கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இவருடைய நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியினை பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்பொழுது இவர் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்ற வருகிறது இந்த படப்பிடிப்பின் பொழுது நடிகை குஷ்பூ எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகர் சரத்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை குஷ்பூ உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தால் நடிகை குஷ்பூ வாரிசு திரைப்படத்தில் நடிக்கிறார் என்று சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. இதற்கு முன்பு நடிகர் விஜய் உடன் இணைந்து குஷ்பூ வில்லு, மின்சார கண்ணாகிய திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இவர்கள் மீண்டும் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளார்கள் என கூறப்பட்டு வந்தது.
இப்படிப்பட்ட நிலையில் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக சமீப பேட்டியில் நடிகை குஷ்பு இதற்கு பதில் அளித்துள்ளார். அதாவது வாரிசு திரைப்படத்தில் நான் நடிக்கவில்லை என்றும் வாரிசு படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு நான் சென்ற பொழுது பிரபு மற்றும் சரத்குமார் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்றும் மற்றபடி வாரிசு படத்திற்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் குஷ்பூ வாரிசு திரைப்படத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது மேலும் ஒரு செட்டில் போய் உட்கார்ந்தது தவறா எனவும் பேட்டி அளித்துள்ளார். இவ்வாறு நடிகை குஷ்பூ தொடர்ந்து சின்னத்திரையில் சீரியல்களை தானே தயாரித்து தானே நடித்து வருகிறார்.
#Kushboo – #Varisu kum enakkum Samanthame illa 😃#ThalapathyVijay #VarisuPongal#VarisuPongal2023 pic.twitter.com/rhLIIW1bfr
— VCD (@VCDtweets) October 4, 2022