விஜயகாந்தின் 25, 50, 75, 100 – வது படங்கள் வெற்றி அடைந்ததா.? படத்தின் பெயர் என்ன தெரியுமா.?

Vijayakanth
Vijayakanth

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் தொடர்ந்து பரிசோதித்து வருகின்றனர். விஷயத்தை கேள்விப்பட்ட தொண்டர் மற்றும் ரசிகர்கள் விஜயகாந்த் பூர்ண குணமடைந்து மீண்டும் வீட்டுக்கு வர வேண்டும் என பிராத்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜயகாந்தின் 25,50, 75, 100, 125 ஆகிய படங்களின் பெயர்கள் மற்றும் அந்த படங்கள் வெற்றியடைந்ததா.. இல்லையா.. என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

முத்து – மீனாவை பிரிக்க பார்க்கும் ஸ்ருதி.! போற போக்க பார்த்தா விஜயாவ ஓவர்டேக் பண்ணுவாங்க போல.. சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

விஜயகாந்தின் 25 வது திரைப்படம் :  நூறாவது நாள் 1984 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் விஜயகாந்த் சத்யராஜ், தேங்காய் சீனிவாசன், மோகன், நளினி, ஜனகராஜ் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். திரில்லர் படமாக இருந்ததால் அப்பொழுது வெளியாகி பெரிய ஹிட் அடித்தது.

விஜயகாந்தின் 50 வது படம் : நீதியின் மறுபக்கம்  1985 ஆம் ஆண்டு  எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ராதிகா, விகே ராமசாமி, செந்தில், வடிவுக்கரசி, ஜெய்சங்கர் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் படம் கிராமத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பெரிய ஹிட் அடித்தது.

எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க வேல ராமமூர்த்தி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா?

விஜயகாந்தின் 75 ஆவது திரைப்படம்  : உழவன் மகன் அரவிந்தராஜ் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு வெளியான  இந்த படத்தில் விஜயகாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார் படம் ஆக்சன் படமாக இருந்ததால் அப்பொழுது வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது.

விஜயகாந்தின் 100 வது படம் : கேப்டன்  பிரபாகரன் செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் உருவான  இந்த படத்தில் வீரபத்திரனை கேப்டன் விஜயகாந்த் காட்டுக்குள் சென்று பிடிப்பது தான் கதை.. ஆக்சன். எமோஷனல் என கலந்திருந்ததால் அப்பொழுது வெளிவந்து பெரிய ஹிட் அடித்தது.

விஜயகாந்தின் 125 வது திரைப்படம் :  உளவுத்துறை ரமேஷ் செல்வம் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் 1998 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படம் தான் படம் வெளிவந்து அதிக நாட்கள் ஓ டி வெற்றி பெற்றது.