விஜய் டிவியில் சீசன் சீசன் ஆக பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ளது கடந்து முடிந்த ஐந்து சீசன்களையும் கமலஹாசன் தொகுத்து வழங்கியிருந்தார். ஆனால் தற்போது ஒளிபரப்பாக இருக்கும் ஆறாவது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஏனென்றால் கமல் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி உள்ளார். பிக்பாஸ் 6 நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்குவது சந்தேகம். அதனால் விஜய் டிவி கமலுக்கு பதிலாக ஐந்து நடிகர்களை குறி வைத்துள்ளது. சிம்பு : ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால் சில காரணங்களால் அவர் பாதியில் வெளியேற அந்த சீசனை சிம்பு தொகுத்து வழங்கி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் பிக்பாஸ் 6 சிம்பு தொகுத்து வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. அர்ஜுன் : பிக் பாஸ் சீசன் 5 ஒளிபரப்பான சமயத்தில் ஜீ தமிழில்..
சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது இதை சிறப்பாக அர்ஜுன் கொண்டு சென்றார். இதனால் அதிக தொகையை கொட்டி கொடுத்து அர்ஜுனை விஜய் டிவி இழுக்க வாய்ப்புள்ளது. விஜய் சேதுபதி : நடிகர் விஜய் சேதுபதி சன் டிவியில் மாஸ்டர் ஷேஃப் என்ற சமையல் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
அதனால் தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க வாய்ப்பு உள்ளது. மாதவன் : நடிகர் மாதவன் பல நிகழ்ச்சிகளை அருமையாக தொகுத்து வழங்கியவர். அதனால் மாதவன் கையில் விஜய் டிவி பிக் பாஸ் ஆறாவது சீசனை கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது போல் தெரிகிறது.