ஏராளமான சினிமா பிரபலங்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார்கள் அதுவும் முக்கியமாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களுடைய அழகு குறைந்து விடும் என்பதற்காக இதனை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் 38 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வரும் நடிகை தான் திரிஷா.
38 வயதானாலும் கூட இவர் தொடர்ந்து சினிமாவில் கலக்கி வருகிறார் மேலும் சமீபத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் கவர்ந்தார். மேலும் இந்த படத்தில் மிகவும் இளமையாக இருந்த இவருடைய தோற்றத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு வந்தார்கள் மேலும் அனைவரும் பொறாமைப்படும் அளவிற்கு மிகவும் அழகாக கட்டுக்கோப்பான உடல் அமைப்புடன் இருந்து வரும் இவர் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் தற்பொழுது இவருக்கு திருமணம் ஆசை வந்துள்ளது இதன் காரணமாக சில கண்டிஷங்களை போட்டுள்ளார் மேலும் திருமணத்தைப் பற்றி சில கொள்கைகளை வைத்துள்ளார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது அதாவது திருமணம் செய்து கொண்டால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து வாழக்கூடிய நபர் இவர்தான் என்று என் மனதில் தோன்ற வேண்டும் அப்படி ஒருவரை சந்தித்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என தெளிவாக கூறியுள்ளார்.
அதோடு மட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிவது அவருக்கு விருப்பம் இல்லையாம் திருமணத்திற்கு பிறகு அழகான வாழ்க்கை வேண்டுமென்றும் குடும்பம், இல்லற வாழ்வு, குழந்தைகள் என மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை அனுபவிக்க வேண்டும் என கூறியுள்ளார் இவ்வாறு இந்த தகவல் சோசியல் மீடியா வைரலாக பலரும் இவர் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவை குத்தி காட்டி உள்ளதாக கூறி வருகிறார்கள்.
அதாவது காதலித்து அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்ட சமந்தா மற்றும் நாக சைதன்யா திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே விவாகரத்தை பற்றி பிரிந்தார்கள் மேலும் தனுஷ், ஐஸ்வர்யாவும் விவாகரத்து பெற்றுக் கொண்ட நிலையில் திரிஷா இவ்வாறு நடக்காமல் இருக்க வேண்டும் என விரும்புகிறார் என பலரும் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகிறார்.