சினிமா உலகில் மிகப்பெரிய பட்ஜெட் படங்களை எடுக்கும் இயக்குனர்கள் எப்பொழுதும் சிறப்பான அந்தஸ்து இருக்கும் அந்த வகையில் ஷங்கரை தொடர்ந்து மிகப்பெரிய பட்ஜெட் படங்களை இயக்கி அதில் பல நூறு கோடி வசூல் செய்தது வெற்றி இயக்குனராக தற்போது வரையிலும் சிறப்பாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராஜமௌலி இதுவரை தோல்வியை சந்திக்காத இயக்குனர் என்ற அந்தஸ்தையும் தன்பக்கம் வைத்துள்ளார்.
பாகுபலி சீரிஸ் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்து எடுத்து வரும் திரைப்படம் ரத்தம் ரணம் ரவுத்திரம் (RRR) என்ற திரைப்படத்தை எடுத்து வருகிறார் இந்த திரைப்படம் பாகுபலி போலவே இந்த படமும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது காரணம் அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதிலிருந்து புகைப்படத்தை பார்த்து வேற லெவல் கற்பனை செய்து வருகின்றனர்.
இந்த படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடி செலவில் உருவாகி வருகிறது இதில் ராம்சரன் ஜூனியர், என்டிஆர் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க இந்த படத்தில் வில்லனாக அஜய் தேவ்கன் நடிப்பது இந்த படத்திற்கு மேலும் பலமாக அமைந்துள்ளது இதனால் அனைத்து மொழிகளிலும் கல்லா கட்ட முடியும் என தற்போது படக்குழு கணக்கு போட்டு உள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தை எப்படியாவது ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிட வேண்டும் என படக்குழு முனைப்பு காட்டினாலும் தற்போது இருக்கின்ற சூழலில் சரிப்பட்டு வராததால் படத்தை பொங்கலுக்குவெளியானாலும் வெளியாகலாம் என தெலுங்கு சினிமா வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளிவருகின்றன.
ஆனால் படம் இன்னும் முடிந்தபாடில்லை அதற்குள்ளேயே இந்த திரைப்படத்தை டிஜிட்டல் உரிமம் ஜீ 5 நிறுவனம் தற்போது 325 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே இவ்வளவு பெரிய தொகையை அள்ளி உள்ள நிலையில் படம் வெளிவந்தால் மிகப்பெரிய அளவில் ஒரு சாதனை படைக்கும் என தெரிய வருகிறது.
தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் அஜீத்-விஜய் படங்கள் கூட இதுபோன்ற ஒரு வசூலை எட்டி பார்த்தது கூட கிடையாது.