தமிழ் திரையுலகில் திரௌபதி என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றி கண்டவர் தான் மோகன் ஜி. இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் சமீபத்தில் ருத்ரதாண்டவம் என்ற ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் இத்திரைப்படம் இன்று இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் ரிஷி, தர்ஷா குப்தா ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பல்வேறு நடிகர்கள் நடித்து இருப்பது மட்டுமல்லாமல் போதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அதனுடைய விளைவுகள் குறித்தும் இத்திரைப்படத்தை உருவாக்கி உள்ளார்.
இவ்வாறு போதை பொருட்கள் எப்படி கடத்துகிறார்கள் இதைப் பயன்படுத்துவதால் என்ன விளைவுகள் ஏற்படும் இவற்றை மிக தெளிவாக இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனர் வெளிகாட்டியுள்ளார். மேலும் இவ்வாறு செயலில் ஈடுபட்டால் அவர்களுடைய குடும்பம் என்ற நிலைமைக்கு ஆளாகும் என்பதையும் சுட்டி காட்டி உள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இத்திரைப்படத்தில் நாடக காதல் வசனம்,சாதிப் பெருமிதம் போன்ற பல்வேறு காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மோகன் இயக்கிய இத்திரைப்படத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனை குறிப்பிட்ட காட்டியது போல் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும்.
அந்தவகையில் தற்போது தான் இயக்கிய ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்திலும் திருமாவளவன் போன்ற ஒரு கதாபாத்திரம் வைத்துள்ளார். அந்த வகையில் இது குறித்து இயக்குனர் மோகன்னிடம் கேள்வி எழுப்பிய போது துரோபதி திரைப்படத்தில் நான் வேண்டுமென்றே இது போன்ற கதாபாத்திரம் வைக்க வில்லை ஆனால் இந்த திரைப்படத்தில் நான் அவரை தான் குறிப்பிட்டு காட்டி உள்ளேன் என்று ஓபனா பேசியுள்ளார்.