சின்னத்திரை மூலம் வெள்ளித்திரைக்கு மாறிய நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சின்னத்திரையில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் பின்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு துணை நடிகராக நடித்தார் அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.அப்படிதான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம்,ரஜினி முருகன் மிகவும் புகழ் பெற்று விளங்கியது.
மேலும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற திரைப்படம் சீமராஜா இந்த திரைப்படம் வெளியான பொழுது இவரது ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை கொண்டாடியதை தொடர்ந்து இந்தத் திரைப்படம் முழுவதுமே ஒரு காமெடி கலந்த திரைப்படம் போல் இருந்திருக்கும் ஆனால் முக்கியமாக குடும்பங்களுடன் இந்த திரைப்படத்தை மக்கள்கள் பார்த்து ரசித்தார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் உடன் நெப்போலியன்,கீர்த்தி சுரேஷ்,சூரி,லால், சிம்ரன் போன்ற பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள் சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும் மக்களுக்கு இந்த திரைப்படம் என்றால் மிகவும் பிடிக்கும் அது மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிவகார்த்திகேயனின் திரைப்படங்களில் இந்த திரைப்படம் அதிகமாக வெளியாகும்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திற்கு அவர் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்பது பற்றி தற்பொழுது ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது அதன்படி சீமராஜா திரைப்படத்திற்காக சிவகார்த்திகேயன் ரூ.18 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம் மேலும் இவரது நடிப்பில் தற்போது மாவீரன் என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார் இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது தொடர்ச்சியாக இவரது கைவசம் நிறைய திரைப்படங்களை வைத்துள்ளார்.