பிரமாண்ட இயக்குனர் சங்கர் இத்தனை ஹாலிவுட் படத்தை காப்பி அடித்தாரா? இளம் இயக்குனரை மிஞ்சிவிட்டாரே ஷங்கர்.! லிஸ்ட் இதோ.

shankar
shankar

தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை எடுத்து முன்னணி இயக்குனராக மாறியவர் ஷங்கர் என்பது நாம் அறிந்ததே. இவர் குறைந்த படங்களை இயக்கியிருந்தாலும் அத்தகைய படங்கள் மாபெரும் வசூல் சாதனை படைத்தது இதன்மூலம் தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய அளவில் தான் சிறந்த இயக்குனர் என்பதை மக்கள் மற்றும் சினிமா உலகிற்கு வெளிப்படுத்தினார்.

இவர் 1993 ஆம் ஆண்டு ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானர். இவருக்கு முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது இப்படத்தினை தொடர்ந்து அவர் காதலன் இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி தி பாஸ், ஐ, நண்பன், எந்திரன் போன்ற படங்களில் தான் யார் என்பதை நிரூபித்தார் சங்கர் அதுமட்டுமில்லாமல் இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது. சில இயக்குனர்கள் மிகப்பெரிய பட்ஜெட் என்றாலே தடுமாறுவது வழக்கம் ஆனால் அதனை லாவகமாக கையாண்டு சினிமா துறையில் சிறப்பாக பயணித்து வருகிறார் ஷங்கர்.

தற்பொழுது அவர் உலகநாயகன் கமலஹாசன் அவரை வைத்து இந்தியன் 2 என்ற படத்தை இயக்கி வருகிறார் இப்படம் சில பிரச்சனைகள் காரணமாக தற்போது தள்ளி போய் உள்ளது இந்த நிலையில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய பல படங்கள் ஹாலிவுட் படங்களின் தழுவல் கூறப்படுகிறது அத்தகைய செய்தி சமூகவலைதளத்தில் உலாவருகிறது.இவர் இயக்கி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படங்கள் பல காப்பி அடிக்கப்பட்டது என கூறப்படுகிறது அதனை தற்போது வரிசையாகப் பார்ப்போம்.

ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படம் ராபின்ஹூட் என்ற ஹாலிவுட் படத்திலிருந்து சூட்டப்பட்டது. அதேபோல் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த எந்திரன் திரைப்படம் பைசென்டினல் மேன் இன்னும் ஹாலிவுட் படத்திலிருந்து காப்பியடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் வெளிவந்த அந்நியன் படம் சேவன் என்ற ஹாலிவுட் படத்தை தழுவியது அதுமட்டுமில்லாமல் உலகநாயகன் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டடித்த இந்தியன் திரைப்படம் கூட தமிழ் சினிமாவில் வெளியான நாம் பிறந்த மண் என்ற படத்தில் இருந்து காப்பி அடிக்க பட்டதாக கூறப்படுகிறது. இத்தகைய செய்தியை அறிந்த பலரும் இவர் அட்லீ மிஞ்சுவார் போல என கூறி வருகின்றனர்.