விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணத்தில் சமந்தா கலந்து கொண்டாரா.? வெளிவந்த தகவல்..

samantha-nayanthara-1
samantha-nayanthara-1

இன்று மிகவும் கோலாகலமாக இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா அவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் ஏராளமான திரை பிரமுகர்கள் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தி சிறப்பித்தார்கள்.

இவர்கள் நானும் ரவுடி என்ற திரைப்படத்தில் இருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் பிறகு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா நடித்து வந்தார். மேலும் இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் கடைசியாக விஜய் சேதுபதி,நயன்தாரா மற்றும் சமந்தா இவர்களின் கூட்டணியில் காத்துவாக்குல 2 காதல் திரைப்படம் வெளிவந்தது.

இத்திரைப்படத்தில் சமந்தா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.  அதோடு மட்டுமல்லாமல் இந்த படப்பிடிப்பில் நயன்தாரா மற்றும் சமந்தா இவர்களுக்கு இடையே நெருக்கமான நட்பு உருவானது.  மேலும் இவர்கள் நெருக்கமாக இருப்பது போல் ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மீடியாவில் வைரலானது.

மேலும் இந்நிலையில் இன்று நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொண்டாரா சமந்தா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.  எனவே நெருங்கிய தோழியான நயன்தாராவின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் சமந்தாவுக்கு ஏற்பட்டுள்ளது.

தற்போது நடிகை சமந்தா நடிகர் விஜய் தேவரகொண்டானுடன் இணைந்து குஷி திரைப்படத்தில் நடித்து மிகவும் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதன் காரணத்தினால் தான் நயன்தாரா திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை அதே நேரத்தில் செல்போன் மூலம் அவர் நயன்தாராவுக்கும்,விக்னேஷ் சிவனுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.