தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ் இவர் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானதை தொடர்ந்து காதல் கொண்டேன் என்ற திரைப்படத்தில் நடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இந்த நிலையில் தன்னுடைய மூன்றாவது திரைப்படமான திருடா திருடி என்ற திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை அடைந்தார்.
பின்பு ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டு ரஜினியின் மருமகன் என்ற அந்தஸ்துடன் சினிமாவில் ஜொலித்து வந்தார். சினிமாவில் ஏதாவது ஒரு தோல்வி திரைப்படத்தை தனுஷ் கொடுத்துவிட்டால் அடுத்த திரைப்படத்தை எப்படியாவது வெற்றி திரைப்படமாக மாற்றி தன் நிலைமையை தக்க வைத்துக் கொள்வார். அந்த அளவு தன்னுடைய கேரியரில் உறுதியாக இருந்தார்.
இந்தநிலையில் தனுஷ் தன்னுடைய மனைவியை இயக்குனராக அறிமுகம் செய்வதற்காக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கினார். அதேபோல் ஐஸ்வர்யா அவர்களால் தயாரிப்பில் இறங்கிய தனுஷ் பல திரைப்படங்களை தயாரித்து நஷ்டங்களையும் அடைந்தார். ஒரு சில திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக கிடைத்தாலும் பல திரைப்படங்கள் நஷ்டத்தைக் கொடுத்தது இதனால் தனுஷ் மிகப்பெரிய கடனாளியாக மாறினார்.
இனி புதிய திரைப்படத்தை தயாரிக்க வேண்டுமென்றால் கடன் வாங்கித்தான் தயாரிக்க வேண்டும் என்ற சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார் தனுஷ் படும் கஷ்டத்தை தன்னுடைய மகள் ஐஸ்வர்யா மூலம் தெரிந்து கொண்டார் ரஜினிகாந்த். அப்பொழுது ரஜினிகாந்த அவர்களுக்கு கபாலி படம் வெளியாகியது அந்த திரைப்படம் தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபத்தைப் பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் கபாலி திரைப்படத்தில் என்பது கோடி வரை சம்பளமாக ரஜினிகாந்த் வாங்கினார்.
இதனைத்தொடர்ந்து அடுத்ததாக ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படத்தில் ரஜினி நடித்தார் தன்னுடைய மருமகன் கடனில் இருப்பதால் 40 கோடி மட்டுமே சம்பளமாக கொடுத்தால் போதும் என பேசி கால்ஷீட் கொடுத்துள்ளார். ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படம் நேர்மறையான சமமான விமர்சனங்களைப் பெற்றது அப்படி இருந்தும் எப்படி ரஜினி அவர்கள் மீண்டும் ரஞ்சித் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் என மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
இந்தநிலையில் காலா திரைப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை காலா திரைப்படம் ஓரளவு லாபத்தை பெற்று தந்தாலும் ரஜினி நடித்த பாபா, லிங்கா திரைப்படத்தில் நஷ்ட தொகை கேட்டு ரஜினி வீட்டின் முன்பு விநியோகஸ்தர்கள் போராட்டம் நடத்தும் அளவிற்கு ஒரு சூழல் வந்துவிடக்கூடாது என்பதற்காக விநியோகஸ்தர்களை சரிசெய்தார் தனுஷ். அதனால் தனுஷ் அவர்களுக்கு 25 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
ஏற்கனவே கடனில் தவித்துக்கொண்டிருக்கும் மருமகன் தனுஷ் மேலும் காலா திரைப்படத்தின் மூலம் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கடும் சிக்கலில் சிக்கி உள்ளார் என்பதை ரஜினிகாந்த் அறிந்தார். ஆனாலும் அதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவே இல்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து காலா திரைப்படத்தின் மூலம் மிகச் சிறிய தொகை மட்டுமே மருமகன் தனுஷுக்கு கிடைத்தது. அதனால் தனுஷ் தன்னுடைய கடனில் ஒரு சில கடனை தான் அவரால் அடக்க முடிந்தது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினி காலா திரை படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்திருந்தால் தனுஷ் இவ்வளவு கடன் தொகையை அடைந்திருக்க மாட்டார் அல்லது விநியோகஸ்தர்கள் அடைந்த 25 கோடி நஷ்டத்தை ரஜினி ஏற்றுக்கொண்டிருந்தால் தனுஷிற்கு ஓரளவு உதவியாக இருந்திருக்கும் ஆனால் இதை எதையும் ரஜினிகாந்த் செய்யவில்லை மருமகன் என்று கூட பார்க்காமல் கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த தகவல் தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது தனுஷ் ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்யபோவதாக அறிவித்துள்ளது ரஜினிக்கு பெரும் அடியாக விழுந்துள்ளது.
இதை ரஜினி எப்படி சமாளிக்க போகிறார் என சினிமா பிரபலங்கள் பேசிவருகிறார்கள்.