தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயனைவர் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. அதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது அது மட்டுமல்லாமல் வசூலிலும் நல்ல லாபம் பார்த்தது.
இதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தற்போது அனு திப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த ஒரு காதல் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
தீபாவளி முன்னிட்டு வெளியான பிரின்ஸ் திரைப்படம் தற்போது திரையரங்கில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது ஆனால் இந்தத் திரைப்படம் வெளியாகி முதல் நாள் மட்டும் நல்ல வசூல் செய்தது அதன் பிறகு நெகட்டிவ் விமர்சனங்கள் வரவே வசூல் அப்படியே குறைய ஆரம்பித்துவிட்டது.
60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ஐந்தே நாட்களில் 23 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி முன்னிட்டு வெளியான இந்த திரைப்படம் கடுமையான விமர்சனத்தை பெற்று தற்போது தோல்வியை சந்தித்து வருகிறது.
ஆனால் இந்த படத்துடன் போட்டி போட்ட கார்த்தியின் சர்தார் திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றும் வசூலிலும் லாபம் பார்த்து விட்டது அது மட்டுமல்லாமல் சர்தார் இரண்டாம் பாகமும் வெளியாக உள்ளதாக சர்தார் பட இயக்குனர் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் மிகவும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஆனால் சர்க்காருடன் மோதிய பிரின்ஸ் திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். முழுக்க முழுக்க காமெடி கலந்த ஒரு காதல் திரைப்படமாகவே கொண்டு போனதால் படத்தில் உள்ள சுவாரஸ்யமும் குறைந்துவிட்டது. இதனால் தற்போது பிரின்ஸ் திரைப்படம் செலவு செய்த பட்ஜெட்டை வசூல் செய்யவே திரறி வருவதாக கூறப்படுகிறது.