முதலமைச்சராகவும், சினிமா உலகில் முன்னணி நடிகராகவும் வலம் வந்தவர் எம்ஜிஆர் இவர் முதலில் நாடகத்தில் சின்ன சின்ன வேடங்களில் தனது திறமையை காட்டினார் ஒரு கட்டத்தில் வெள்ளி திரையில் சின்ன வேடங்களில் நடித்து வந்த இவர் கொஞ்சம் கொஞ்சமாக போராடி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தார்.
அன்றிலிருந்து தனது திரை வாழ்க்கை முடியும் வரை நல்ல கதைகளில் மட்டுமே நடித்ததால் எம்ஜிஆரின் பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென அரசியல் கட்சி ஒன்றை தொடங்கி பின் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சராக..
அரியணை ஏறினார். மூன்று முறை முதல்வராக இருந்த சாதனை படைத்தார்.. எம்ஜிஆர் வயதானாலும் அழகும், உடல் கட்டுக்கோப்பாக இருந்ததால் இவர் அப்பொழுது தங்க பஸ்பம் சாப்பிட்டதாக பலரும் சொல்லி வந்தனர். இது எம்ஜிஆர் காதுக்கும் போக அவர் இதற்கு விளக்கமும் கொடுத்துள்ளார். ஒரு மேடையில் எம்ஜிஆர் சொன்னது..
பல பேருக்கு ஒரு சந்தோஷம் உள்ளது நான் தினமும் தங்க புஷ்பம் சாப்பிடுவதால் தான் நிறமாகவும், உடல் திடமாகவும் இருப்பதாக நினைக்கிறார்கள் அதில் உண்மை இல்லை.. ஒரு குண்டு ஊசி முனையில் தங்கத்தை தொட்டு பாலில் அல்லது நெய்யோ கலந்து சாப்பிடுவார்கள் அளவுக்கு அதிகமானால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.. உடலை பாதுகாப்பது மனதை பொருத்தது.. நமக்கு வயதாகி விட்டது..
என நினைக்காமல் நமக்கு என்ன வயதாகி விட்டது என நினைத்தால் வயோதிகம் நம்மை நெருங்காது மற்றவர்கள்தான் என் வயதைப் பற்றி கவலைப்படுகிறார்கள் நான் அது பற்றி நினைப்பதும் இல்லை.. கவலைப்படுவதும் இல்லை.. என எம்ஜிஆர் கூறினார். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டுதீ போல பரவி வருகிறது.